- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த படத்துக்காக வீட்டை அடமானம் வைத்தேன், ப்ரீத்தி முகுந்தன் 2ம் பாகத்தில் நடிக்கலாம் - அன்பில்...

இந்த படத்துக்காக வீட்டை அடமானம் வைத்தேன், ப்ரீத்தி முகுந்தன் 2ம் பாகத்தில் நடிக்கலாம் – அன்பில் அவன் பட விழாவில் பேசிய நடிகர் அசோக் செல்வன்!

- Advertisement -

இயக்குனர் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் இந்த வாரம் வெளியாக உள்ள படம் அன்பில் அவன். இந்த பட விழாவில் நடிகர் அசோக் செல்வன் பேசியதாவது, நான் நடித்த படம் வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. சினிமாவில் இரண்டரை ஆண்டுகள் என்பது ஐந்து ஆண்டுகள் போன்றது. ஒரு திரைப்படம் என்பது ஏதோ நடித்துவிட்டு செல்வது அல்ல.

சினிமா என்றால் நான் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பேன். அப்படிப்பட்ட படத்தில் தான் நடிக்க வேண்டும் என்று இருக்கிறேன். நல்ல கதைகள் நல்ல கதாபாத்திரம் பார்த்து நடிக்க வேண்டும். அனைத்தும் இதில் தேர்ந்தெடுத்து செய்தோம். இந்த படத்தில் எனக்கு பல நண்பர்கள் கிடைத்தார்கள். பல அனுபவங்களை கற்றுக் கொண்டோம்.

- Advertisement -

நான் இந்த விழாவுக்கு கூப்பிட்ட அனைவரும் இங்கே வந்திருக்கிறார்கள். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏதாவது ஒரு முயற்சி செய்ய வேண்டும். மக்களிடம் ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஒரு படத்தின் போஸ்டரில் என்னுடைய பெயர் போட்டிருந்தால் 100 சதவீதம் எனது உழைப்பு அதில் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அதற்கான மறு கண்டுபிடிப்பு மறு தேடல் செய்ய வேண்டும்.

இந்த முக்கியமான படம் கொடுத்ததற்கு முதலில் என் அக்காவுக்கு நன்றி. மூன்று நான்கு வருடங்களாக அவர் என்னுடன் இருக்கிறார். பல கடினமான விஷயங்களை கடந்து இருக்கிறார். பல சிரமங்களை நான் கடப்பதற்கு அவர்தான் காரணம். எனக்கு அக்கா பலமும் அண்ணன் பலமுமாக அவர் இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் பலரும் மாறிவிடுவார்கள். ஆனால் என் அக்கா அப்படியே இருக்கிறார்.

- Advertisement -

அப்பா அம்மாவுக்கு நன்றி. படத்தின் பட்ஜெட் தாண்டிய போது செலவு அதிகமானது. வீடு அடமானம் வைப்பதற்காக பத்திரத்தை கேட்கும்போது அவர்கள் தயக்காமல் கொடுத்தார்கள். மகன் ஏதோ செய்கிறான் என்று அவனது கனவுக்காக ஆதரவு கொடுத்தார்கள். இயக்குனர் நானும் பத்தாண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம். என் படத்தில் அறிமுகமானவர்கள் இன்று பெரிய படங்களை இயக்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

பிரீத்தி முகுந்தன் எங்கள் படத்தில் நடித்த போது அவரது ஒரு படம் தான் வந்திருந்தது. அவர் நான் முதலீடு செய்துள்ள பிட்காயின் என்று சொல்வேன். இப்போது நான் கல்லூரி விழாக்கள் எங்கு சென்றாலும் ப்ரீத்தி முகுந்தனை கேட்டதாக சொல்லுங்கள் என்று கத்துகிறார்கள். இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர் நடிக்கலாம். நல்ல கதையை தேர்ந்தெடுத்து உருவாக்கி இருக்கும் இந்த படம் மறக்க முடியாத திரையரங்க அனுபவமாக இருக்கும். இதை உலகில் சிறந்த படம் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் நல்ல திரையரங்க அனுபவமாக இருக்கும் என்று நடிகர் அசோக் செல்வன் அந்த விழாவில் பேசி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்