- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் ஏன் ஓட்டு போட வரல தெரியுமா? நடிகை ஜோதிகா சொன்ன விளக்கம் கேட்டு...

நான் ஏன் ஓட்டு போட வரல தெரியுமா? நடிகை ஜோதிகா சொன்ன விளக்கம் கேட்டு வெறுத்துப்போன ரசிகர்கள்

- Advertisement -

நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். அவர் நடித்த பல படங்கள், தமிழில் சூப்பர் ஹிட் படங்களாக இருந்திருக்கின்றன. ஜோதிகாவை பொருத்தவரை ஒரு நல்ல கதாநாயகியாக பல படங்களில் நடித்து, அந்தப் படத்தின் வெற்றிக்கு தனது பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.

உதாரணமாக குஷி, தூள், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, திருமலை, பூவெல்லாம் கேட்டுப்பார், பூவெல்லாம் உன் வாசம், சந்திரமுகி, பிரியமான தோழி என பல படங்களில் ஜோதிகாவின் நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் நடிகர் சூர்யாவை காதலித்து ஜோதிகா திருமணம் செய்து கொண்டார். திருமணத்துப் பிறகு அவரை சினிமாவில் நடிக்க சூர்யாவின் அப்பா நடிகர் சிவகுமார் சம்மதிக்கவில்லை.

- Advertisement -

அதன் பிறகு ஜோதிகா சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். இரண்டு குழந்தைகளுக்கும் தாயானார். இதையடுத்து சமீப காலமாக சினிமாவில் நடிக்க ஜோதிகா மிகுந்த ஆர்வம் காட்டினார். 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் 2015 ஆம் ஆண்டில் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

ஆனால் தொடர்ந்து அவர் நடிப்பதற்கு, சிவக்குமார் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் சென்னையில் இருக்கும் வரை சினிமாவில் நடிக்க முடியாது என்பதை புரிந்து கொண்ட ஜோதிகா, இப்போது மும்பையில் தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் குடியேறிவிட்டார். இதையடுத்து அங்கு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்தியில் அவர் நடித்த சைத்தான் என்ற படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் அஜய் தேவகன், மாதவன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

- Advertisement -

இந்த படத்திற்கு முன்னதாக காதல் தி கோர் என்ற மலையாள படத்திலும் ஜோதிகா நடித்து, அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்போது ஜோதிகா ஸ்ரீகாந்த் என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். பான் இந்தியா படமாக இது உருவாகிறது. இந்த படத்தின் பபிரமோ நிகழ்ச்சிகளில் ஜோதிகா தொடர்ந்து கலந்து கொள்கிறார்.

இன்று சென்னையில் ஸ்ரீகாந்த் படத்தின் தமிழ் வெர்ஷன் பிரமோவுக்காக ஜோதிகா செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது நடிகை ஜோதிகாவிடம் செய்தியாளர்கள், நீங்கள் ஏன் நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு போட வரவில்லை என்று கேட்டனர். அதற்கு நடிகை ஜோதிகா, சில சமயங்களில் வேலைக்காக வெளியூர் செல்ல வேண்டியிருக்கும். உடல் நலக் குறைவாக கூட இருக்கலாம். சில தனிப்பட்ட காரணங்களால் ஊரில் இருக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. எல்லா விஷயத்தையும் பொதுவெளியில் சொல்ல முடியாது. எனக்கு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. அதற்கும் நான் முக்கியத்துவம் தர வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஓட்டு போட வராததற்கு இப்படி ஒரு பதிலா என்று ரசிகர்கள் பயங்கரமாக அப்செட் ஆகி உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்