- Advertisement -
Homeபொழுதுபோக்குமகளிர் தினத்துக்கு வீடியோ வெளியிட்டு வாங்கிக் கட்டிக்கொண்ட நடிகை ஜோதிகா, சொல்றது ஒண்ணு, செய்யறது...

மகளிர் தினத்துக்கு வீடியோ வெளியிட்டு வாங்கிக் கட்டிக்கொண்ட நடிகை ஜோதிகா, சொல்றது ஒண்ணு, செய்யறது ஒண்ணா? – கடுப்பான சூர்யா ரசிகர்கள்

- Advertisement -

நடிகை ஜோதிகா, மும்பையில் இருந்து தமிழுக்கு நடிக்க வந்தவர். அவரது துரு துரு பார்வையும், சுறுசுறுப்பான, குறும்பான நடிப்பும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. ஒரு கட்டத்தில், நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து, நடிகர் சிவக்குமார் வீட்டு மருமகளாகவும் மாறிப் போனார்.

துவக்கத்தில் சிவக்குமார், அவரது மனைவி லட்சுமி ஆகியோரை தனது மாமனார், மாமியார் அல்ல. என்னுடைய அப்பா, அம்மா தான் என்று கூறினார். குறிப்பாக எனக்கு மிகப்பெரிய பக்க பலமே, எனது அத்தை தான் எனவும் சூர்யாவின் அம்மாவை பெருமையாக பேசினார். இதனால் சிவக்குமார் குடும்பம் மட்டுமின்றி, சூர்யா ரசிகர்களும் ஜோதிகாவை பாராட்டி கொண்டாடினர்.

- Advertisement -

இரண்டு குழந்தைகளுக்கு சூர்யா, ஜோதிகா பெற்றோர் ஆன நிலையில், சூர்யா தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். ஜோதிகா குடும்பத்தை, பிள்ளைகளை கவனித்துக்கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் ஜோதிகா மீண்டும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஆனால் இது சிவக்குமார், லட்சுமி உள்ளிட்டோருக்கு பிடிக்கவில்லை. சூர்யா சொல்லியும் ஜோதிகா கேட்கவில்லை.

மீண்டும் ஜோதிகா நடித்த படங்களை ரசிகர்கள் வரவேற்க துவங்கியதால், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. இனி சென்னையில் இருந்தால் நடிக்க விடமாட்டார்கள் என்பதால், சூர்யாவிடம் இந்தியில் உங்களை பெரிய நடிகனாக்கி காட்டுகிறேன். என் அக்கா நக்மாவுக்கு பாலிவுட்டில் பெரிய செல்வாக்கு இருக்கிறது என்று மண்டையை கழுவி, குடும்பத்தை மும்பைக்கு ஷிப்ட் செய்துவிட்டார். குழந்தைகளின் கல்விக்காக மும்பை இடமாற்றம் என்றும் அனைவரையும் நம்ப வைத்துவிட்டார்.

- Advertisement -

இந்நிலையில் நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதற்கான தனது வலைதள பக்கத்தில் ஜோதிகா, ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், A women in my life என்ற தலைப்பில், தனது வாழ்க்கையில் உள்ள பெண்கள் என்று சில பெண்களின் புகைப்படங்களை இந்த வீடியோவில் ஜோதிகா வெளியிட்டுள்ளார்.

அதில் ஜோதிகாவின் அம்மா, ஜோதிகாவின் மகள் தியா, ஜோதிகாவின் தங்கை ரோஷிணி, அக்கா நக்மா, ஜோதிகாவின் தோழிகள், அதன்பிறகு கார்த்தி மனைவி ரஞ்சனி, சூர்யா தங்கை பிருந்தா ஆகியோருக்கு பிறகு கடைசியில் ஜோதிகாவின் மாமியார் லட்சுமி புகைப்படத்துடன் அந்த வீடியோ நிறைவடைகிறது. என்னுடைய இன்னொரு அம்மா என்று கூறிய ஜோதிகா, இப்படி வீடியோவில் கடைசியாக பதிவிட்டு என்ன இருந்தாலும் அது மாமியார்தான் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டார் என சூர்யா ரசிகர்கள் கடுப்பாகி ஜோதிகாவை திட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்