- Advertisement -
Homeபொழுதுபோக்குதளபதி 68 திரைப்படத்தின் ஹீரோயின் மாற்றம், ஜோதிகா சொன்ன பகீர் காரணம், யார் நடிக்கிறாங்கன்னு தெரிஞ்சிக்கனுமா?

தளபதி 68 திரைப்படத்தின் ஹீரோயின் மாற்றம், ஜோதிகா சொன்ன பகீர் காரணம், யார் நடிக்கிறாங்கன்னு தெரிஞ்சிக்கனுமா?

- Advertisement -

“லியோ” திரைப்படத்தை தொடர்ந்து விஜய், “தளபதி 68” திரைப்படத்திற்கு தயாராகி வருகிறார். தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள Institute of creative technology என்ற மையத்திற்கு விஜய், வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் சென்றுள்ளனர்.

“தளபதி 68” திரைப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம். அதாவது வயதான தந்தை கதாபாத்திரத்திலும் இளவயது மகன் கதாபாத்திரத்திலும் நடிக்கிறாராம். இதில் வயதான கதாபாத்திரத்தை தத்ரூபமாக காட்சிப்படுத்துவதற்குரிய டெக்னாலஜியை பயன்படுத்தத்தான் அமெரிக்காவிற்கு சென்றுள்ளனர் படக்குழுவினர்.

- Advertisement -

அங்கே விஜய்யின் முழு உடலும் ஸ்கேன் செய்யப்பட்டு, அந்த ஸ்கேன் செய்யப்பட்ட விஜய்யின் உருவத்தை வைத்து வயதான கதாபாத்திரத்தை எப்படி தத்ரூபமாக வடிவமைப்பது என கிராபிக்ஸ் தொழில்நுட்பத்துடன் திட்டமிட்டுள்ளனராம். வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் தங்களது சமூக வலைத்தளங்களில் இது குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

“தளபதி 68” திரைப்படத்தில் தந்தை விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க உள்ளார் எனவும் மகன் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார் எனவும் கூறப்பட்டது. அதே போல் இளவயது விஜய்க்கு தம்பியாக ஜெய் நடிக்க உள்ளார் எனவும் அவருக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடிக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது “தளபதி 68” திரைப்படம் குறித்தான ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தில் முதலில் ஜோதிகா தந்தை விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்று கூறப்பட்ட நிலையில் ஜோதிகா இத்திரைப்படத்தில் தன்னால் நடிக்க முடியாது என கூறிவிட்டாராம்.

அதாவது இதில் மகன் விஜய்க்கு வயதான தாயாக நடிக்க வேண்டிய சூழல் வரும் என்பதாலும் விஜய் தன்னை அம்மா என்று அழைத்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எனவும் ஜோதிகா கூறினாராம். படக்குழுவினருக்கும் ஜோதிகா கூறுவது சரிதான் என்று தோன்றியதால் தற்போது சினேகாவை அணுகியுள்ளார்களாம். சினேகா இத்திரைப்படத்தில் நடிக்க 70 சதவிகிதம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்