- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜயுடன் சூர்யாவை ஒப்பிட்டு கிண்டலாக விமர்சனம் செய்த ரசிகர்- அதற்கு நடிகை ஜோதிகா...

நடிகர் விஜயுடன் சூர்யாவை ஒப்பிட்டு கிண்டலாக விமர்சனம் செய்த ரசிகர்- அதற்கு நடிகை ஜோதிகா கொடுத்த தரமான பதிலடி!

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் த வருகிற சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். மேலும் இந்த தேர்தலில் விஜய் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்து நிற்கிறார். கரூர் சம்பவம் குறித்த சிபிஐ விசாரணை, மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனு நடிகை திரிஷாவுடன் கிசுகிசு என ஏகப்பட்ட பிரச்னைகள் விஜய்க்கு தலைவலியாக இருக்கின்றன.

இந்த சூழலில் விஜயின் ரசிகர்கள் சினிமாவில் இருக்கும் மற்ற நடிகர்களை மட்டம் தட்டி பேசி வருகின்றனர். நடிகர் சூர்யா பற்றி அப்படி ஒரு ரசிகர் ஜோதிகாவிடம் கிண்டல் செய்ய அதற்கு ஜோதிகா பல்பு தந்த விஷயம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே பல பிரச்சனைகளில் சிக்கியுள்ள நடிகர் விஜய்க்கு, அவரை சுற்றி இருப்பவர்களே மேலும் பிரச்னைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த தவெக கண்டன ஆர்ப்பாட்டத்தில், தவெக கட்சியின் மூத்த நிர்வாகி ஆதவ் அர்ஜூனா தேவையே இல்லாமல் ரஜினி குறித்து பேசி பெரிய வம்பை விலைக்கு வாங்கினார். திமுக மிரட்டலுக்கு பயந்துதான் ரஜினி அரசியலுக்கு வரவில்லை. விஜய் போல அவருக்கு திமுகவை எதிர்த்து நிற்கும் மனவலிமை ரஜினிக்கு இல்லை என்று அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதற்கு பதிலடியாக நடிகர் ரஜினியும் ஒரு அறிக்கையில் காலம் பேசாது. ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என்றும் மறைமுகமாக எச்சரித்தார். அதன்பிறகு ஆதவ் அர்ஜூனா ரஜினியிடம் மன்னிப்பு கேட்ட போதும் ரஜினி ரசிகர்கள் தொடர்ந்து விஜய் குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர். வருகிற தேர்தலில் தவெக கட்சியின் கணக்கை முடித்து வைப்போம் என்றும் பதிவுகளை செய்து வருகின்றனர்.

- Advertisement -

ரஜினி பிரச்சனை இப்போது சற்று ஓய்ந்துள்ள நிலையில் இன்ஸ்டாகிராமில் நடிகை ஜோதிகாவின் பதிவு ஒன்றில் சென்று விஜய் ரசிகர் ஒரு வில்லங்கத்தை செய்திருக்கிறார். அதில் சூர்யாவை விட விஜய் தான் சிறந்த நடிகர் என்று அந்த ரசிகர் கமெண்ட் செய்திருக்கிறார். அதற்கு அவரது மனைவி நடிகை ஜோதிகா சிரிக்கும் ஸ்மைலி படத்தை போட்டு பதிலடி கொடுத்திருப்பது போன்ற ஒரு புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த பலரும், மற்றவர்களிடம் வம்பிழுத்து தேவையின்றி பல்பு வாங்குவது விஜய் ரசிகர்களுக்கு வேலையாக போய்விட்டது என்று கிண்டல் செய்து வருகிறார்கள். மேலும் இப்படி விஜய்க்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அவரது கட்சி நிர்வாகிகளும் ரசிகர்களும் அவருக்கு தொடர்ந்து பிரச்னையை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். இது எல்லாம் தேர்தல் முடிவில் விஜய்க்கு பாதகமாக மாறும் என்றும் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்