- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யாவின் திரைப்படத் தேர்வு குறித்து மௌனம் கலைத்த நடிகை ஜோதிகா... இப்பதான் தெரியுது எதுக்கு சூர்யாவுக்கு...

சூர்யாவின் திரைப்படத் தேர்வு குறித்து மௌனம் கலைத்த நடிகை ஜோதிகா… இப்பதான் தெரியுது எதுக்கு சூர்யாவுக்கு பெரிய ஹிட் படங்களே வருவதில்லை என ரசிகர்கள் கலாய்…

- Advertisement -

சூர்யா நடிப்பில் வெளியாகியிருக்கும் கங்குவா திரைப்படம் விமர்சன ரீதியாக பெருத்த அடியை கொடுத்திருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம், ஆஹா ஓஹோ என்று இருக்கும் என பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பலரும் கூறியிருந்ததால், தற்போது அதனை வைத்து செய்கிறார்கள்.

 

- Advertisement -

விஸ்வல் ரீதியாக படம் பிரம்மாண்டமாக இருந்தாலும் திரைக்கதை எங்கே என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது. இதனை ஒத்துக் கொண்டு அடுத்த படத்தில் சரி செய்தால் என்ன என்று கேள்வி எழுப்பும் ரசிகர்கள் எதற்கு வடை சுடுகிறீர்கள் என்றும் கோபமாக வினவுகின்றனர்.

 

- Advertisement -

அதற்கு ஏற்றது போலவே இவர்களும் கங்குவா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் மிக அதிகமாகவே பேசினர். படம் அப்படி இருக்கும் இப்படி இருக்கும் வாயை பிளந்து கொண்டு பார்ப்பீர்கள் அடுத்த மாதம் சக்சஸ் மீட் இருக்கும் 2000 கோடி வசூல் செய்யும் என அவர்கள் தனது பேச்சுக்கு எல்லை இல்லாமல் தொடர்ந்தனர்.

 

இதன் காரணமாகவே ரசிகர்கள் கங்குவா திரைப்படத்தை வைத்து செய்ய, அதனைத் தாங்கிக் கொள்ள முடியாத நடிகை ஜோதிகா இணையதளத்தில் பதிவிட்டு பொங்கி எழுந்தார். படத்தின் முதல் 30 நிமிடங்கள் சரியில்லை இரைச்சலாக இருந்தது என்பதை ஒப்புக்கொள்கிறேன் ஆனால் அதன் பிறகு படம் நன்றாக இருந்தது என்று அவர் கூறியிருக்கிறார்.

 

ஒரு அனுபவம் மிக்க சினிமா பார்த்ததை கங்குவா கொடுக்கும் என்றும் பேசியிருந்த அவர், இதே போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் இந்த அளவு விமர்சனங்களுக்கு உள்ளாகாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார். அதேபோல படத்தின் நல்ல விஷயங்களை ஏன் விமர்சகர்கள் கூறவில்லை என்றும் அவர் பொங்கி இருந்தார்.

 

இப்படியான சூழலில், ஜோதிகா பேசிய பழைய வீடியோவை தற்போது இணையவாசிகள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். எனது திரைப்படம் தொடர்பான கதைகளை நானே முடிவெடுப்பேன். ஆனால் சூர்யா தொடர்பான கதைகளை இருவரும் சேர்ந்து முடிவெடுப்போம் என்று பேசி இருந்தார். இதனை இணையத்தில் ஷேர் செய்து வரும் ரசிகர்கள் இப்பொழுது தான் தெரிகிறது ஏன் சூர்யாவுக்கு நீண்ட நாட்களாக பிளாக்பஸ்டர் திரைப்படங்களே வரவில்லை என்று என கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்