- Advertisement -
Homeபொழுதுபோக்குகார்த்தி - லோகேஷ் கனகராஜ் இப்போதைக்கு இணைய வாய்ப்பில்லை, தள்ளிப் போடப்பட்ட கைதி 2 படப்பிடிப்பு...

கார்த்தி – லோகேஷ் கனகராஜ் இப்போதைக்கு இணைய வாய்ப்பில்லை, தள்ளிப் போடப்பட்ட கைதி 2 படப்பிடிப்பு – ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக நேரடியாக களத்தில் இறங்கியவர் லோகேஷ் கனகராஜ். குறும்படங்களை மட்டுமே இயக்கிய அனுபவத்தில், யாரிடமும் உதவி இயக்குனராக பணி செய்யாமல் அவர் இயக்கிய முதல் படம் மாநகரம் படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அதன்பிறகு அவர் இயக்கிய கைதி படம் மாஸ் ஹிட் படமாக இருந்தது.

நடிகர் கார்த்தி நடித்த இந்த படம் 57 இரவுகளும் அரை பகலிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்ட படமாகும். பாடல் காட்சிகள், கதாநாயகி இல்லாமல் உருவான கைதி படத்தில் ஒரு இரவு நடக்கும் காட்சிகளே முழு படமாகவும் இருக்கும். இதில் கார்த்தி நடிப்பு வேற லெவலில் இருந்தது.

- Advertisement -

கைதி படம் தந்த அபார வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படமும் மாஸ் ஹிட் படமாக அமைந்தது. இது கமலுக்கு தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்த படமாகவும் இருந்தது. அதனால் சொகுசு காரை இயக்குனருக்கு கமல் பரிசளித்தது குறிப்பிடத்தக்கது. விக்ரம் 2 படமும் வரும் ஆண்டுகளில் எடுக்கப்பட உள்ளது.

விக்ரம் படத்தை அடுத்து விஜய் நடித்த மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் லியோ படத்துக்கு பிறகு இப்போது ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படத்தை டைரக்ட் செய்து வருகிறார். 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இன்னும் சில மாதங்களில் கூலி ஷூட்டிங் நிறைவடைய உள்ளது. அதன்பிறகு கார்த்தி நடிப்பில் கைதி 2 படப்பிடிப்பை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் துவங்க இருப்பதாக தெரிய வந்தது.

- Advertisement -

ஆனால் இப்போது வந்த லேட்டஸ்ட் தகவலின்படி கூலி படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ், நடிகர் கார்த்தி இணைய வாய்ப்பில்லை. கைதி 2 படப்பிடிப்பு இப்போதைக்கு துவங்கப்படவில்லை. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் கைதி 2 ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதனால் கைதி 2 படப்பிடிப்பு வருகிற 2026ம் ஆண்டில்தான் துவங்குகிறது.

இதற்கிடையே நடிகர் கார்த்தி, டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும், அது 2 பாகங்களாக உருவாக இருப்பதாகவும் இந்த படம் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படவும் உள்ளது. அதற்குள் தெலுங்கு படம் ஒன்றை லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்