- Advertisement -
Homeபொழுதுபோக்குகல்கி 2898 நாளை ரிலீஸ் ஆவது உறுதிதான், ஆனா…கடைசி நேரத்துல இப்படி ஏமாத்திப்புட்டாங்களே - புலம்பி...

கல்கி 2898 நாளை ரிலீஸ் ஆவது உறுதிதான், ஆனா…கடைசி நேரத்துல இப்படி ஏமாத்திப்புட்டாங்களே – புலம்பி தீர்க்கும் ரசிகர்கள்!

- Advertisement -

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்த நடிகர் பிரபாஸ், ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தின் 2 படங்களில் நடித்த பிறகு, பான் இந்தியா ஸ்டார் நடிகராக மாறிவிட்டார். ஏனெனில் பாகுபலி படங்களின் வீச்சு, இந்தியா முழுவதும் அவர்களுக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டு வந்துவிட்டது. அதனால் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக இந்திய அளவில் அவரது இமேஜ் உயர்ந்து விட்டது.

இந்நிலையில், பிரபாஸ் நடிப்பில் ரூ. 740 கோடி பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக உருவாகி உள்ள கல்கி 2898 படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். துல்கர் சல்மான், அமிதாப் பச்சன், விஜய் தேவரகொண்டா போன்ற ஸ்டார் நடிகர்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

- Advertisement -

இந்த படத்தை பொருத்தவரை தொழில்நுட்ப காட்சிகள்தான் பிரதானமாக இருக்கிறது. பெரிய பிரமாண்டத்தை படத்தின் டிரெய்லர் பார்த்த ரசிகர்கள் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளனர். அதிலும் நெற்றியில் கண்ணுடன் தோன்றிய கமல்ஹாசன், அதில் ஹைலைட்டாக தெரிந்தார். எப்படியும், இந்த படம் பெரிய அளவில் உலகம் முழுவதும் ரீச் ஆகும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தின் டிரெய்லர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆர்வத்தை கிளப்பியது. சில விமர்சனங்கள் எழுந்தாலும், இந்த படம் நிச்சயம், வேற லெவலில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில், நாளை இந்த படத்தை காண ரசிகர்கள், மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

மிகுந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை 3டி தொழில்நுட்பத்தில் நாளை ரிலீஸ் செய்ய, படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதற்காக 3 டி கண்ணாடி அணிந்து படம் பார்க்க, அதற்கான கட்டணத்துடன் ரசிகர்களின் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால் கல்கி படம் பார்க்க 3டி கண்ணாடி கட்டணத்துடன் ரூ. 296 வரை அடிப்படை டிக்கெட் கட்டணமாக இருந்தது.

இந்நிலையில் நாளை, 3டி தொழில்நுட்பத்தில் கல்கி படம் வெளியாகும் என உலகம் முழுவதும் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், நாளை 2டி படமாக தான் கல்கி படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. இன்னும் 2 தினங்கள் கழித்தோ, அதற்கு பிறகோ தான் இந்த படம் 3டி தொழில்நுட்பத்துக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதனால் ரசிகர்கள், பலத்த ஏமாற்றத்தில் உள்ளனர். அதே நேரத்தில், 3டியில் படம் பார்க்க கண்ணாடிக்கு கொடுத்த ரூ. 30 கட்டணம், திரும்ப கிடைக்குமா, என்ற கேள்வியும் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்