- Advertisement -
Homeபொழுதுபோக்குவெற்றிலை பாக்கு கையில் கொடுத்து நன்றி சொல்லி அனுப்பிடுவாங்க - கசப்பான அனுபவத்தை சொன்ன இசையமைப்பாளர்...

வெற்றிலை பாக்கு கையில் கொடுத்து நன்றி சொல்லி அனுப்பிடுவாங்க – கசப்பான அனுபவத்தை சொன்ன இசையமைப்பாளர் அனிருத்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டைரக்ட் செய்த முதல் படம் 3. இந்த படத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாகவும் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். இந்த 3 படத்தில் தனுஷின் பள்ளிக்கூட நண்பராக நடித்தவர் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத்.

இந்த படத்தை தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்த அனிருத் இன்று நட்சத்திர இசையமைப்பாளராக இந்திய சினிமாவில் வலம் வருகிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு இந்தி கன்னடம் என பிற மொழிகளிலும் அனிருத் இசையமைக்க பட வாய்ப்புகள் தேடித் தேடி வருகின்றன.

- Advertisement -

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு இயக்குனர் நெல்சனை விட அந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தான் காரணம் என்று நடிகர் ரஜினிகாந்தே ஒரு விழாவில் வெளிப்படையாக பேசியிருந்தார். இப்போது ஜெயிலர் 2 படத்துக்கும் அனிருத் தான் இசையமைக்கிறார். ஒரு படத்துக்கு அனிருத் இசையமைக்க 15 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

அனிருத் 35 வயதுகளை கடந்த நிலையில் இன்னும் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக வலம் வருகிறார். அவரது ரசிகர்கள் அனிருத்துக்கு எப்போது திருமணம் என்று கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். அவ்வப்போது சில நடிகைகள் சில பாடகிகளுடன் அனிருத் இணைத்து கிசுகிசுக்கப்படுவதும் அது நாளடைவில் வதந்தியாக மாறுவதும் அடிக்கடி நடக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இசையமைப்பாளர் அனிருத் கூறியதாவது, சின்ன வயதில் கல்யாணத்திற்கு வாசிக்க போனபோது 500 ரூபாய் சம்பளம் கொடுப்பார்கள். சில நேரம் அதையும் கூட தர மாட்டார்கள். வெறும் வெற்றிலை பாக்கு மட்டும் கொடுத்துவிட்டு நன்றி என்று சொல்லி அனுப்பி விடுவார்கள்.

இப்போது எவ்வளவு கோடி ரூபாய் சம்பாதித்தாலும் அந்த 500 ரூபாய் சம்பளம் கொடுத்த சந்தோஷம் இப்போது கிடைப்பதில்லை என்று இசையமைப்பாளர் அனிருத் அந்த நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார். வசதிகள் பலமடங்கு பெருகிய நிலையில் ஒரு காலகட்டத்தில் பணம் என்பது ஒரு பெரிய மன நிறைவைத் தராது என்று நடிகர் ரஜினிகாந்த் அடிக்கடி குறிப்பிட்டு பேசி வருவதும் கவனிக்கத்தக்கது.

- Advertisement -

சற்று முன்