நடிகர் கமல்ஹாசன், உலக நாயகன் என்றுதான் சினிமா உலகில் அழைக்கப்படுகிறார். ஆனால், அந்தளவுக்கு இந்திய சினிமாவில் தன்னிகரில்லாத ஒரு நாயகனாக அவர் தன்னை பல படைப்புகளில் வெளிப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறார். இன்னும் நடிப்பில் அவருக்கான மிடுக்கும், கம்பீரமும் குறையாமல், நாளுக்கு நாள் தன்னை புதுப்பித்துக்கொள்ளும் ஒரு கலைஞராக இருக்கிறார்
ஏற்கனவே குடும்ப வாழ்க்கையில் குறிப்பாக திருமணம் சார்ந்த விஷயங்களில் அவர் கடுமையான விமர்சனங்களை சந்தித்தவர். இரண்டு திருமணம், திருமணம் செய்யாமலேயே கவுதமியுடன் 17 ஆண்டுகள் குடும்பம் நடத்தியது, சிம்ரன், பூஜாகுமார் போன்றவர்களுடன் அவர் வைத்திருந்த உறவு போன்றவை, கடுமையாக விமர்சிக்கப்பட்டு, சர்ச்சையானது.
எனினும், ஒரு திரைக்கலைஞனாக அவரது பங்களிப்பும், கலைத்திறமையும் ரசிகர்களின் பெரும் விருப்பமும், நாளுக்கு நாள் அவருக்கான வரவேற்பும் கூடிக்கொண்டே போகிறது. கமல்ஹாசனின் திரைப்பயணத்தில், ஒரு கம்பேக் படமாக, விக்ரம் அமைந்தது, அவருக்கு அதிக உற்சாகத்தை தர, முன்பை விட இன்னும் அதிக வேகத்துடன் தன் திரைப்பயணத்தை தொடர்கிறார் கமல்ஹாசன்.
இதற்கிடையே கடந்த ஆறு ஆண்டுகளை தொடர்ந்து, இப்போது 7ம் ஆண்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து நடத்தி வருகிறார். வாரந்தோறும் சனி, ஞாயிறு தினங்களில் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பஞ்சாயத்துகளை பேசி, போட்டியாளர்களை வீட்டுக்கும் அனுப்புகிறார். முதலில் இந்த நிகழ்ச்சி சுவாரசியமாக, கமல் பேச்சு மிக ரசிக்கும்படியாக இருந்தது.
ஆனால், இப்போது நடந்துவரும் பிக்பாஸ் 7வது சீசன், மிகவும் சர்ச்சைக்குரியதாக, அதிக விமர்சனங்களை கொண்டதாக மாறியிருக்கிறது. குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில், போட்டியாளர் பிரதீப் ஆண்டனியை கமல் ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றியது முதல், கமல் மீதான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் அதிகரித்து விட்டன.
இதையடுத்து, இந்த 7வது சீசனுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு கமல் விலகிவிட முடிவு செய்து இருக்கிறார் என்ற தகவல் பரவி வருகிறது. ஏனெனில் அவரது நலம் விரும்பிகள், நண்பர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியால் உங்கள் பெயர் கெடுகிறது. சமூக வலைதளங்களில் மிக மோசமாக விமர்சிக்கின்றனர். ஒரு அரசியல் கட்சி தலைவராக உங்களுக்கு, இது உங்கள் வாக்கு வங்கியை பாதிக்கும். தவிர பணத்துக்காக, பிழைப்புக்காக கமல் பிக்பாஸ் நடத்துகிறார் போன்ற தவறான விமர்சனங்கள் உங்கள் இமேஜை பாதிக்கிறது என கூறியதை அடுத்து இந்த முடிவுக்கு கமல் வந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது.





