- Advertisement -
Homeபொழுதுபோக்குஇளையராஜா வெளியிட்ட திடீர் வீடியோவால் பரபரப்பு, என்னை பற்றிய செய்திகள் நிறைய வருது - 35...

இளையராஜா வெளியிட்ட திடீர் வீடியோவால் பரபரப்பு, என்னை பற்றிய செய்திகள் நிறைய வருது – 35 நாட்களில் அந்த விஷயத்தை நான் முடித்து விட்டேன்!

- Advertisement -

இசைஞானி இளையராஜா, சமீபகாலமாக அதிகமாக செய்திகளில் அவரது பெயர் அடிபடுகிறது. நான் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் எனக்கே சொந்தம் என்று கூறும் அவருக்கு ஒரு தரப்பு ஆதரவும், மற்றொரு தரப்பு எதிர்ப்பும் தெரிவித்து வருகிறது. அதனால் தொடர்ந்து பலவிதமான நேர்மறை, எதிர்மறை விமர்சனங்களில் இளையராஜா சிக்கிக்கொண்டே இருக்கிறார்.

அதிலும் குறிப்பாக சமீபத்தில், கூலி படத்தின் டீசரில் இடம்பெற்ற பிஜிஎம் என்னுடையது, எப்படி அதை உங்கள் தயாரிப்பு படத்தில் பயன்படுத்தலாம் என சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கே இளையராஜா நோட்டீஸ் அனுப்பியதுதான் உச்சக்கட்ட பரபரப்பாக அமைந்தது. ஏனெனில் அது இளையராஜாவை சாமி என அழைக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இப்படி ரஜினிகாந்த் நடித்த படத்துக்கே நோட்டீஸ் அனுப்புகிறாரே இளையராஜா என பலரும் அதிர்ந்து போயினர். என்றாலும் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் இளையராஜா. பணபலமும், அரசியல் செல்வாக்கும் நிறைந்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடமே இளையராஜா மோதியிருப்பதால், இதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று இளையராஜா ஒரு வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அதில் இளையராஜா கூறியிருப்பதாவது, எல்லோருக்கும் வணக்கம், நான் தினமும் கேள்விப்படுகிறேன். என்னை பற்றி ஏதேனும் ஒரு வகையில், இது மாதிரியான வீடியோக்கள் நிறைய வந்துகிட்டு இருக்கு. செய்திகள் வருதுன்னு வேண்டியவர்கள் வந்து என்கிட்ட சொல்வாங்க.

- Advertisement -

நான் இதில் எல்லாம் கவனம் செலுத்தறது இல்லை. ஏன்னா, மத்தவங்களை கவனிக்கறது என்னோட வேலை இல்லை. என்னுடைய வேலையை கவனிக்கறதுதான் என்னுடைய வேலை. அதனால் என் வழியில் நான் சுத்தமா போயிட்டு இருக்கேன். நீங்கள் என்னை வாழ்த்திக் கொண்டிருக்கிற நேரத்தில் ஒரு மாதத்தில் ஒரு சிம்பொனியை எழுதி முடித்து விட்டேன். பிலிம் சாங்ஸ் எடுத்துட்டு, விழாக்களுக்கு சென்று தலையையும் காட்டீட்டு இந்த வேலைகளுக்கு நடுவே ஒரு சிம்பொனியை 4 மூவ்மெண்டுகளுக்குள் முழுமையாக எழுதி முடித்திருக்கிறேன்.

இந்த சந்தோஷமான செய்தியை, என் ரசிகர்களுக்கு சொல்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் பிலிம் மியூசிக் வேறு, பேக்கிரவுண்ட் மியூசிக் வேறு, இதெல்லாம் அதுல ரிப்ளெக்ட் ஆச்சுன்னா அது சிம்பொனி கிடையாது. அதை ஒரு ப்யூர் சிம்பொனியாக எழுதி முடித்திருக்கிறேன் என்ற உற்சாகமான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன் என, இளையராஜா அந்த வீடியோவில் கூறியிருக்கிறார். அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் https://x.com/ilaiyaraaja/status/1791087002227704196

- Advertisement -

சற்று முன்