மெளனம் பேசியதே படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அமீர். தொடர்ந்து ராம் பருத்திவீரன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை தந்து நட்சத்திர இயக்குனராக மாறினார். பிறகு நடிகராகவும் தன் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனம் கவர்ந்தார். அமீர் சிறந்த நடிப்பு கலைஞராக பல படங்களில் தன்னை நிரூபித்திருக்கிறார்.
இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் ராஜன் என்ற தாதா கேரக்டரில் அமீர் நடித்திருந்தார். இப்போது வெற்றிமாறன் ராஜன் வகையறா என்ற படத்தை இயக்கி வருகிறார். இது வடசென்னை ராஜன் கேரக்டரை மையப்படுத்திய அவரது இளம் வயது வாழ்க்கையை கதைக்கருவாக கொண்டுள்ளது.
குறிப்பாக ராஜன் வகையறா படத்தில் அமீர் தனது 16 வயது முதல் 26 வயது வரை வாழ்ந்த வாழ்க்கை, அப்போது ஏற்படும் சம்பவங்கள் ஒரு சாதாரண இளைஞனாக இருந்த அவர் எப்படி தாதாவாக மாறினார் என்பதை சொல்லும் விதமாக இந்த ராஜன் வகையறா படம் உருவாகி வருகிறது. வடசென்னை படத்தில் நடித்த அமீருடன் சமுத்திரக்கனி ஆண்ட்ரியா கிஷோர் ராதாரவி உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராஜன் வகையறா படம் குறித்த லேட்டஸ்ட் அப்பேட் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் இளம் வயது ராஜன் கேரக்டரில் அதாவது அமீராக நடிகர் கென் கருணாஸ் நடிக்கிறார். அவர்தான் இளம் வயது அமீராக வருகிறார். அவரது அப்பாக அமீர் வருகிறார். அதாவது இளைஞர் அமீராக கென் கருணாஸூம், வயதான அவரது அப்பாவாக அமீரும் நடித்துள்ளனர்.
இதே போல் படத்தில் நடித்த மற்ற கேரக்டர்கள் கிஷோர் சமுத்திரக்கனி ராதாரவி உள்ளிட்டோரும் வயதான அப்பா கேரக்டரில் நடிக்க அவர்களது இளம் வயது கேரக்டரில் அவர்களது தோற்றத்தை ஒத்த இளம் வயது நடிகர்களை தேர்வு செய்து அவர்களுடன் வெற்றிமாறன் நடிக்க வைத்திருக்கிறார்.
தன்னை போலவே இளம் வயது நடிகர்களை பார்த்து சமுத்திரக்கனி கிஷோர் போன்றவர்கள் அசந்து போய்விட்டனர். அதிலும் நடிகர் ராதாரவி, அவரது இளம் வயது மகன் ராதாரவி கேரக்டரில் நடித்த வாலிபரை பார்த்து, அச்சு அசல் என்னை போலவே அந்த பையன் இருக்கிறான். அவன் நடிப்பதை பார்த்தால் நானே அப்போது நடித்தது போல் இருக்கிறது என்று மிரண்டு போய் படப்பிடிப்பில் இருந்தவர்களிடம் கூறி பாராட்டியும் இருக்கிறார்.





