- Advertisement -
Homeபொழுதுபோக்குராஜ்கமல் பட நிறுவனத்தை டென்சன் செய்த சிவகார்த்திகேயன் - காஷ்மீரில் எஸ்கே 21 ஷூட்டிங்கில் இப்படி...

ராஜ்கமல் பட நிறுவனத்தை டென்சன் செய்த சிவகார்த்திகேயன் – காஷ்மீரில் எஸ்கே 21 ஷூட்டிங்கில் இப்படி ஒரு பிரச்னை நடந்திருக்கா?

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த அவர், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய மெரினா படம் மூலம், தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.

தொடர்ந்து மனம்கொத்தி பறவை, அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ, காக்கிச்சட்டை, நம்மவீட்டு பிள்ளை, டாக்டர் போன்ற படங்களால், முன்னணி இளம் கதாநாயகனாக மாறினார். இன்று நேற்று நாளை பட இயக்குநர் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படம், விரைவில் திரைக்கு வர உள்ளது.

- Advertisement -

இந்நிலையில், இசையமைப்பாளர் டி இமான் அளித்த நேர்காணல் ஒன்றில், சிவகார்த்திகேயன், மன்னிக்க முடியாத துரோகத்தை எனக்கு செய்துவிட்டார் என கூறியிருந்தார். குடும்ப நண்பராக இருந்த அவர், இப்படி ஒரு துரோகத்தை எனக்கு செய்வார் என எதிர்பார்க்கவே இல்லை எனவும் தெரிவித்து இருந்தார்.

இது, தமிழ் சினிமா வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகார்த்திகேயன் மீது மிகுந்த அன்பும், நட்பும் கொண்டிருந்த சக நடிகர்கள், இயக்குநர்கள் மத்தியில் இது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இதுவரை இதற்கு மறுப்போ, கண்டனமோ சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து வராததும் கவனிக்கத்தக்கது.

- Advertisement -

இதற்கிடையே, ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ஒரு படத்தில், சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். காஷ்மீரில் 60 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங், 90 நாட்கள் வரை நடந்திருக்கிறது. அதாவது ஒரு மாதம் அதிகமாக நடந்ததால், கமல் படம் நிறுவனம் பயங்கரமாக டென்சன் ஆகியுள்ளது.

இதையடுத்து, என்ன பட்ஜெட் திட்டமிடப்பட்டதோ அதற்குள் படத்தை எடுத்து முடிக்க வேண்டும் என, கமல்பட நிறுவனம் படக்குழுவினரை எச்சரித்துள்ளது. இப்போது சென்னையில் திருவேற்காடு, மாங்காடு பகுதிகளில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. மீண்டும் 10 நாட்கள் காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்த வேண்டிய நிலையில், கமல் நிறுவனம் கெடுபிடி காட்டியதால், செலவுகளை கட்டுப்படுத்த படக்குழு சற்று தடுமாற்றத்தில் உள்ளது.

- Advertisement -

சற்று முன்