- Advertisement -
Homeபொழுதுபோக்குவேகமெடுக்கும் பிக்பாஸ் 7வது சீசன் பணிகள்... அந்த 18 பேரின் பட்டியலும் கிடைச்சாச்சு... இவங்களாம் பயங்கரமான...

வேகமெடுக்கும் பிக்பாஸ் 7வது சீசன் பணிகள்… அந்த 18 பேரின் பட்டியலும் கிடைச்சாச்சு… இவங்களாம் பயங்கரமான ஆளேச்சேப்பா…

- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் வந்து போனாலும், அவர்களில் நடிப்பு ராட்சசர்கள் என்றால் சிவாஜி, கமல்ஹாசன், விக்ரம் என சிலரையே கூறலாம். இதில் உலகநாயகன் கமல்ஹாசனுக்கென எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. நடிப்பை தாண்டி இயக்குநர், பாடகர், தயாரிப்பாளர் என பல அவதாரம் பூண்டிருக்கும் கமல்ஹாசன், சில ஆண்டுகளுக்கு முன்பு சின்னத்திரையிலும் தோன்ற ஆரம்பித்தார்.

விஜய்டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கலந்து கொண்ட அவர், ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று மக்களின் மனதில் எளிதாக இடம்பிடித்தார். 100 நாட்கள் உலகத் தொடர்பு, உறவினர் தொடர்பு என எதுவும் இல்லாமல் வீட்டில் அடைந்திருக்கும் 18 பேரின் குணாதிசயம், அவர்களின் மனநிலை, மற்றவர்களிடம் வெளிபடுத்தும் அணுகுமுறை அனைத்தையும் தோலுரித்து காட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உண்டு.

ஒவ்வொரு சீசனையும் ரசித்து பார்க்கும் மக்கள், அதனை இணையத்தில் வைரலாக்கி 100 நாட்கள் இந்த பிக்பாஸை பற்றியே எங்கும் பேசிக்கொண்டிருப்பார்கள். வார இறுதி நாட்களில் தோன்றும் கமல்ஹாசனும், போட்டியாளர்களின் பஞ்சாயத்து ஒவ்வொன்றையும் கேட்டு தீர்க்க வைக்க, மக்களின் சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக பிக்பாஸ் உருவெடுத்தது.

இந்த முறை விஜய் டிவியில் 7வது சீசனில் பிக்பாஸ் அடியெடுத்து வருகிறது. இதற்கான புரோமோக்களை விஜய் டிவி அடுத்தடுத்து வெளியிடுவதால், இப்போதே பிக்பாஸ் பற்றிய பேச்சு எழ ஆரம்பித்துள்ளது. போன முறை, எந்த பிரபலங்களும் இல்லாமல் ஆரம்பத்த பிக்பாஸ் சீசன், மக்களை பெரிதாக கவரவில்லை. பிரபலமான நபர்கள் யாரும் இல்லாததால் ஆறாவது சீசன், மற்ற சீசன்களை காட்டிலும் டல் அடித்தது. அதனால் இந்த முறை ஆட்கள் தேர்வில் விஜய் டிவி மிகுந்த கவனமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் முக்கிய பிரபலங்கள் பலரையும் சீசனில் களமிறக்க விஜய் டிவி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அக்டோபர் முதல் வாரம் இந்த 7வது சீசன் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த முறை, ரசிகர்களை கவர புதுமையான யுக்திகள் பலவற்றை புகுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சீசன் எப்படி இருந்தாலும், அதில் பங்கேற்க போவது யார் என்ற கேள்வி எப்போதுமே ரசிகர்களிடம் இருந்து கொண்டு இருக்கும். இதற்கான கேள்வி இந்த முறை பலமாக எழுந்துள்ள நிலையில், தற்போது 18 பேர் அடங்கிய உத்தேச பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி நடிகர்கள் அப்பாஸ், சந்தோஷ் பிரதாப், நடிகைகள் சோனியா அகர்வால், தர்ஷா குப்தா, அம்மு அபிராமி, குக் வித் கோமாளி விஜே ரக்சன், ஜாக்லின், நடன இயக்குநர் ஸ்ரீதர், காக்கா முட்டையில் நடித்த விக்னேஷ், மாடல்கள் ரவிகுமார், நிலா, நடிகை ரக்சிதாவின் கணவர் தினேஷ், ரேகா நாயர், பப்லு, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், வி.ஜே.பார்வதி உள்ளிட்டோர் இடம் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கிட்டதட்ட பிரபலங்கள் பலரும் இதில் இருப்பதால், இந்த முறை பிக்பாஸ் இல்லம் செம ரகளையாக இருக்கும் என இணையவாசிகள் தெரிவித்து வருகின்றனர்.

சற்று முன்