- Advertisement -
Homeபொழுதுபோக்குசிம்புவுக்கு கமல் கொடுத்த ஸ்பெஷல் கிப்ட் - சிம்பு தர வேண்டிய மிகப்பெரிய தொகையும் தள்ளுபடி...

சிம்புவுக்கு கமல் கொடுத்த ஸ்பெஷல் கிப்ட் – சிம்பு தர வேண்டிய மிகப்பெரிய தொகையும் தள்ளுபடி – ஒருவேளை அப்படி ஒரு பிளான் இருக்குமோ…?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன், தமிழ் சினிமாவில் சீனியர் நடிகராக இருந்தாலும் இளம் நடிகர்களின் திறமையை கவனிக்க மறக்காதவர். நல்ல நடிகர் என்று அடையாளம் கண்டுவிட்டால் அவர்களுக்கு தனது படங்களில் நடிக்க வாய்ப்பளிப்பார். அவர்கள் நடிக்கும் படங்களை, தனது சொந்த பேனரில், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலமாகவும் தயாரிப்பார்.

நடிகர் மாதவன் மீது கமலுக்கு நல்ல அபிமானம் உண்டு. அதனால்தான் அன்பே சிவம் படத்தின் தன்னுடன் நடிக்க வைத்தார். நளதமயந்தி போன்ற படங்களில் அவருக்காக கேமியோ ரோலிலும் நடித்துக்கொடுத்தார். அதே போல் தமிழ் சினிமா இளம் நடிகர்களில் கமலை கவர்ந்த நடிகர்களில் ஒருவர்தான் சிலம்பரசன்.

- Advertisement -

கமல்ஹாசனை போலவே அவரும், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர். தந்தை டி ராஜேந்தரை போலவே சிம்புவும் சினிமாத்துறையில் பலகலை கற்ற வித்தகராக இருக்கிறார். கமல்ஹாசனுக்கும், சிம்புவின் தந்தை டி ராஜேந்தருக்கும் நல்ல நட்பு உண்டு.

சமீபத்தில் இந்தியன் 2 பட விழாவில் பேசிய கமல், நான் ஒருமுறை நடிப்பை விட்டு ஒதுங்கி விடுகிறேன் என்று முடிவு செய்த போது, டி ராஜேந்தர் என் தோள் மீது சாய்ந்துக்கொண்டு அழுதார். சட்டை எல்லாம் நனைந்து விட்டது. நீங்கள் சினிமாவை விட்டு போகக் கூடாது என்று அவர் தேம்பி தேம்பி அழுததை நான் மறக்கவில்லை என்று, சிம்புவின் முன்னிலையில் சொன்னது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது மணிரத்னம் இயக்கும் தக்லைப் படத்தில் கமலும், சிம்புவும் இணைந்து நடித்து வருகின்றனர். இதற்கு முன்பு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிம்பு நடிப்பதாக இருந்தது. இதற்காக வாங்கிய சம்பள அட்வான்ஸில் ரூ. 1.50 கோடி கமலுக்கு, சிம்பு தர வேண்டும். அதை தர வேண்டாம் என கமல், சிம்புவுக்கு தள்ளுபடி செய்திருக்கிறார். இவ்வளவு பெரிய தொகையை தர வேண்டியதில்லை என்று கமல் கூறியது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதுமட்டுமின்றி, சிம்புவுக்கு காஸ்ட்லியான ஸ்பெஷல் கிப்ட் தர முடிவு செய்த கமல்ஹாசன், அவரே பிரத்யேகமாக, டிசைன் செய்து வடிவமைத்த ஜெர்கின் கோட் ஒன்றை ஸ்பெஷல் ஆர்டர் தந்து அவருக்காக கிப்ட் ஆக தந்திருக்கிறார். ஏதேனும் ஒரு விழாவில் சிம்பு அந்த ஜெர்கினை அணிந்து வர வாய்ப்புள்ளது. சிம்பு மீது கமல் வைத்திருக்கும் அன்பு போல, அவரும் கமல் மீது நிறைய மரியாதை அன்பு வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இளைஞரணி தலைவராகிறார் சிம்பு என்று பலரும் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்