- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த பிக்பாஸ் சீசனுடன் டாடா காட்டுகிறார் உலக நாயகன் கமல், அடுத்து வரப்போகிறவர் சிம்பு...

இந்த பிக்பாஸ் சீசனுடன் டாடா காட்டுகிறார் உலக நாயகன் கமல், அடுத்து வரப்போகிறவர் சிம்பு அல்ல, அவர்தான் – அவரு பஞ்சாயத்து பண்றதுல பேர் வாங்குனவராச்சே

- Advertisement -

தமிழ் சினிமாவின் அடையாளமாக இருப்பவர் கமல்ஹாசன். அன்று முதல் இன்று வரை அவரது நடிப்பை, கலை ஆற்றலை யாரும் குறைசொல்லி விட முடியாது. கமல் நடித்த பல படங்கள் திரைக்கதையில் சொதப்பியதே தவிர, அவர் நடிப்பில் என்றும் சொதப்பியதில்லை. அவரது பங்களிப்பு என்பது தோல்வி படங்களில் கூட முழுமையானதாகவே இருக்கும்.

இப்போதும் கமல்ஹாசன், மிக மிக பிஸியாக நடித்துக்கொண்டே தான் இருக்கிறார். 69 வயதிலும் அவர் பம்பரமாக சுழன்று சுழன்று வேலை செய்துக்கொண்டு இருக்கிறார். நேர நிர்வாகம் மட்டுமே அவரது அனைத்து பணிகளையும் எளிதாக்கி வருகிறது. படங்கள், அரசியல், பிக்பாஸ் என மூன்றிலும் நேரம் ஒதுக்கி, தனது பணிகளை செவ்வனே செய்கிறார்.

- Advertisement -

விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டில் பிக்பாஸ் சீசன் துவங்கியது. கடந்த 6 ஆண்டுகளில், 6 சீசன்கள் முடிந்து இப்போது 7வது சீசன் நடந்து வருகிறது. 70 நாட்களை கடந்து இந்த சீசன் போய்க்கொண்டு இருக்கிறது. எப்போதுமே பிக்பாஸ் வீட்டுக்குள் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. கடந்த 7 சீசன்களாக அது தொடர்கதையாகவே நீடிக்கிறது.

இதுவரை பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற போட்டியாளர்கள் தான் விமர்சனம், சர்ச்சைகளுக்கு ஆளாவது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இந்த முறை அவர்களை எல்லாம் விட அதிகளவில் விமர்சனம், சர்ச்சையில் சிக்கிக்கொண்டது கமல்ஹாசன் தான். பிரதீப் ஆண்டனியை ரெட்கார்டு கொடுத்து அவர் வெளியேற்றியதை பலரும் கடுமையாக விமர்சித்தனர்.

- Advertisement -

குறிப்பாக பெண் பாதுகாப்பு குறித்தும், பெண் உரிமைகள் குறித்தும் பேச தகுதியே இல்லாதவர் கமல்ஹாசன். அவர் முகத்தை கண்ணாடியில் ஒருமுறை பார்த்துவிட்டு பிரதீப் ஆண்டனியை வெளியேற சொல்லியிருக்க வேண்டும். இப்போது சொருகிடுவேன் என்று சொன்ன நிக்சனை எச்சரித்ததோடு கமல் விட்டு விட்டதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து இனி வரும் காலங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியை வேறு யாரேனும் ஒரு செலிபரட்டியை வைத்து நடத்தலாம் என திட்டமிட்ட போது, சிம்பு பெயர் முதலில் அடிபட்டது. ஆனால் அவர் தேதி தருவதில், படப்பிடிப்புக்கு வருவதில் குளறுபடி செய்பவர் என்பதால், இனி நடிகர் சரத்குமாரை வைத்து பிக்பாஸ் சீசன் 8 முதல் நிகழ்ச்சியை தொடர முடிவாகி உள்ளது. இவர் ஏற்கனவே கோடீஸ்வரன் நிகழ்ச்சியை மிக சிறப்பாக நடத்தி கலக்கியவர். பஞ்சாயத்து செய்வதிலும் நாட்டாமை என புகழ் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்