- Advertisement -
Homeபொழுதுபோக்குஅமெரிக்காவில் 45 நாட்கள் ஏஐ தொழில்நுட்ப பயிற்சி பெற கமல்ஹாசன் போனதற்கு காரணம் தெரியுமா? அட்ரா...

அமெரிக்காவில் 45 நாட்கள் ஏஐ தொழில்நுட்ப பயிற்சி பெற கமல்ஹாசன் போனதற்கு காரணம் தெரியுமா? அட்ரா சக்க, உலகநாயகன் எதை செஞ்சாலும் அதுல பெரிய விஷயம் இருக்குதே…

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர். தனது 5 வயதில் களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர் ஆனந்தஜோதி படத்தில் எம்ஜிஆருடன் நடித்தார். சிவாஜியுடனும் நடித்திருக்கிறார். பிறகு வாலிபராக கமல் நடித்த படம் அரங்கேற்றம். கே பாலசந்தர் அந்த படத்தை இயக்கி இருந்தார்.

பிறகு தமிழ் சினிமாவில் நடித்து தொடர்ந்து முன்னணி நடிகராக மாறிய கமல்ஹாசன், தேவர் மகன் படத்தில் சிவாஜி கணேசனை நடிக்க வைத்திருந்தார். அதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் விடுதலை, படிக்காதவன், படையப்பா படங்களில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் இணைந்து நடித்திருந்தனர்.

- Advertisement -

ரஜினியும், கமலும் ஆரம்பத்தில் பல படங்களில் ஒன்றாக நடித்து பெரிய நடிகர்களாக வெற்றி பெற்ற நிலையில், தனிப்பட்ட வளர்ச்சிக்காக இனி தனித்தனியாக நடிப்பது என முடிவு செய்து, 40 ஆண்டுகளாக இருவரும் தனியாக நடித்து வருகின்றனர். இப்போது 2 பேருமே இரண்டு சிகரங்களாக தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கின்றனர்.

இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன் 45 நாட்கள் அமெரிக்காவில் தங்குகிறார். அங்கு தரப்படும் ஏஐ தொழில்நுட்ப பயிற்சி வகுப்பில் தொடர்ந்து பங்கேற்கிறார். இதற்காக அவர் 7 ஆண்டுகளாக நிகழ்ச்சி தொகுப்பாளராக நடத்தி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியையும் புறக்கணித்து விட்டார்.

- Advertisement -

கமல் இப்படி அமெரிக்காவில் 45 நாட்கள் தங்கி ஏஐ தொழில்நுட்ப பயிற்சி எடுக்க என்ன காரணம் என்று இப்போது தெரிய வந்துள்ளது. நடிகர் கமல்ஹாசனின் கனவுப் படம் மருதநாயகம். மிகப் பெரிய பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக இந்த படத்தை இயக்கி, தயாரிக்க கமல் திட்டமிட்டார். ஆனால் 1990களில் இந்த படத்தை துவக்கிய அவரால், தொடர்ந்து படத்தை தயாரிக்க முடியவில்லை.

மருதநாயகம் படப்பிடிப்பை இங்கிலாந்து ராணி எலிசபெத் ராணி, அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி இருவரும்தான் துவக்கி வைத்தனர். ஆனால் பலநூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் 30 ஆண்டுகளுக்கு முன் அந்த படத்தை தயாரிப்பது பெரிய கேள்வியாக இருந்தது. மருதநாயகம் படத்தை ஏஐ தொழில்நுட்பத்தில் மீண்டும் தயாரிக்க கமல்ஹாசன் திட்டமிட்டு, அதற்காக தான் இப்போது அமெரிக்காவில் ஏஐ தொழில்நுட்ப பயிற்சி வகுப்பில் 45 நாட்கள் பங்கேற்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்