- Advertisement -
Homeபொழுதுபோக்குவாய்ப்பு தராத கமலின் நண்பரை துப்பாக்கியால் போட்டுத்தள்ள தயாரான ரஜினி பட வில்லன், கேட்கவே பயங்கரமா...

வாய்ப்பு தராத கமலின் நண்பரை துப்பாக்கியால் போட்டுத்தள்ள தயாரான ரஜினி பட வில்லன், கேட்கவே பயங்கரமா இருக்கே

- Advertisement -

1980களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்ற நடிகர்களில் ஒருவர் கராத்தே மணி. இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களை கவர்ந்த வில்லன் நடிகராகவே வலம் வந்தார். குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த “ரங்கா”, “அன்புக்கு நான் அடிமை” ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் பலரையும் கவர்ந்தார்.

கராத்தே மணிக்கு சிறு வயதில் இருந்தே கராத்தே மீது ஆர்வம் இருந்ததால்  ஜப்பான் சென்று அங்கிருந்த முன்னணி கராத்தே பயிற்சியாளர்களிடம் கராத்தே பயின்றார். இவரை குறித்து ஒரு முக்கியமான விஷயத்தை கூற வேண்டும் என்றால், கராத்தே தற்காப்புக் கலையில் பிளாக் பெல்ட் வாங்கிய முதல் தமிழர் இவர்தான். சென்னையில் சொந்தமாக ஒரு கராத்தே பள்ளியை நடத்தி வந்தார். மேலும் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள கராத்தே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். இவ்வாறு பல பெருமைகளுக்குச் சொந்தக்காரராகத் திகழ்ந்தவர் கராத்தே மணி.

கராத்தே மணி, கராத்தே துறையில் பல சாதனைகளை செய்திருந்தாலும், அவருக்கு சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அவரது உருவத்தை பார்த்து அவருக்கு வில்லன் வேடங்களே தேடி வந்தது. இந்த நிலையில் கமல்ஹாசனின் நண்பரும் பிரபல இயக்குனருமான ஆர்.சி.சக்தியுடன் கராத்தே மணி தனது வீட்டில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தாராம். இருவருக்கும் நன்றாக போதை ஏறியிருக்கிறது.

அப்போது கராத்தே மணி, “என்னை ஹீரோவாக வைத்து படம் எடுங்கள்” என்று கூறினாராம். அதற்கு ஆர்.சி.சக்தி முடியாது என்று கூற, இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். உடனே கராத்தே மணி, தனது வீட்டில் ஒரு அறைக்குள் புகுந்து துப்பாக்கியை எடுக்க சென்றாராம். இதனை பார்த்த கராத்தே மணியின் வீட்டார்கள் அந்த அறையிலேயே கராத்தே மணியை பூட்டிவைத்துவிட்டனர். அதன் பின் ஆர்.சி.சக்தியின் குடும்பத்தாருக்கு தொலைப்பேசியில் தொடர்புகொண்டு அவரை அழைத்துப்போக சொல்லிவிட்டார்களாம். எனினும் அடுத்த நாள் கராத்தே மணி மன்னிப்பு கேட்டுக்கொண்டாராம்.

சற்று முன்