தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு அதிர்வலையையே ஏற்படுத்தி இருப்பதாக கூறலாம், அந்தளவுக்கு டி ஆர் பி-ல் முதல் இடத்தை பிடித்திருக்கும் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக பிக் பாஸ் திகழ்ந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக விளங்குபவர் கமல்ஹாசன். இவர் தொகுத்து வழங்கும் விதமும் கண்டஸ்டெண்டுகளின் தவறை சுட்டிக்காட்டி கண்டிக்கும் விதமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
மேலும் சமீப சீசன்களில் கமல்ஹாசன் பல முக்கியமான புத்தகங்களையும் பரிந்துரைத்து வருகிறார். அவர் பரிந்துரைக்கும் புத்தகங்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்ததாக பதிப்பகத்தார்களும் மகிழ்ச்சியோடு கூறுகின்றனர். இவ்வாறு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை ரசிகர்களையும் கவர்ந்து தன் பக்கம் இழுத்துள்ளார் கமல்ஹாசன்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7 ஆவது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த முறை மிக வித்தியாசமாக இரண்டு வீடுகள் இடம்பெறும் என்றும் கண்டெஸ்டண்டுகளை சமமாக பிரித்து இரண்டு வீடுகளில் விளையாட வைக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளிவந்துள்ளது.
ஆதலால் கடந்த 6 சீசன்களை விட 7 ஆவது சீசன் மிகவும் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சண்டை சச்சரவுகள் நிறைந்த சீசனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக கமல்ஹாசன் வாங்க உள்ள சம்பளத்தை குறித்த ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல்ஹாசன் ரூ.130 கோடி ரூபாய் சம்பளமாக பெற உள்ளாராம்.





