- Advertisement -
Homeபொழுதுபோக்குரசிகர்களையும் நீதியையும் மட்டுமே நம்பி நாங்கள் இருக்கிறோம் - ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெளியிட்ட வீடியோவில்...

ரசிகர்களையும் நீதியையும் மட்டுமே நம்பி நாங்கள் இருக்கிறோம் – ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெளியிட்ட வீடியோவில் உருக்கம்!

- Advertisement -

கேவிஎன் புரடக்சன்ஸ் சார்பில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் நேற்று 9ம் தேதி வெளியாக இருந்த நிலையில் சென்சார் சான்றிதழ் கிடைக்காத நிலையில் அந்த படம் வெளியாகவில்லை. குறிப்பிட்ட நாளில் படத்தை ரீலீஸ் செய்ய முடியாத சூழ்நிலையில் அந்த படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா உருக்கமாக பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா கூறியிருப்பதாவது, ஜனநாயகன் படம் தணிக்கை வாரியத்திடம் கடந்த டிசம்பர் மாதம் 18ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது. தணிக்கை குழுவினர் படத்தை பார்த்த பிறகு டிசம்பர் 22ம் தேதி எங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் ஒரு சில மாற்றங்களுடன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.

தணிக்கை குழுவினர் பரிந்துரைத்த மாற்றங்களை செய்த பிறகு படத்தை நாங்கள் மீண்டும் தணிக்கை வாரியத்திடம் சமர்ப்பித்தோம். படத்திற்கு விரைவில் சான்றிதழ் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தோம். படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி விட்ட சூழலில் கடந்த ஜனவரி 5ம் தேதி மாலை எங்களுக்கு வந்த தகவலின் படி ஒரு புகாரின் பேரில் ஜனநாயகன் படம் மறு ஆய்வு குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

புகார் அளித்தவர் யார் என்று தெரியாத நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியும் நெருங்கி விட்டதால் நாங்கள் ஐகோர்ட்டை அணுகினோம். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் ஜனநாயகன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டது. ஆனால் தணிக்கை வாரியம் இந்த உத்தரவை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்தது. இதில் ஜனநாயகன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கடினமான நேரத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் ரசிகர்கள் விநியோகஸ்தர்கள் பங்குதாரர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இந்த படத்தை திட்டமிட்ட நாளில் திரைக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக எங்களால் முடிந்த அளவுக்கு அனைத்து முயற்சிகளையும் செய்து விட்டோம். ஆனால் எவ்வளவு கடினமாக முயன்றும் எங்களால் படத்தை திட்டமிட்டபடி குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் செய்ய முடியவில்லை.

இந்த படத்துக்காக ஆண்டுக்கணக்கில் உழைத்த அனைவருக்குமே இது மிகவும் கடினமான நேரம். அனைத்திற்கும் மேலாக ரசிகர்களின் அன்புக்குரிய விஜயை மிகுந்த மரியாதையுடன் திரைத்துறையில் இருந்து வழியனுப்ப வேண்டும் என்று நம்புகிறோம். ரசிகர்களின் பொறுமை அசைக்க முடியாத நம்பிக்கையே எங்களுக்கு சக்தியை வழங்குகிறது. நீதித்துறை மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. விரைவில் இந்த படம் திரைக்கு வரும் என்று நாங்களும் நம்புகிறோம் என்று அந்த வீடியோவில் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா உருக்கமாக கூறியிருக்கிறார்.

சற்று முன்