- Advertisement -
Homeபொழுதுபோக்குஹீரோக்கள், டைரக்டர்களை ஆட்டிப் படைக்கும் லேட்டஸ்ட் சென்டிமென்ட் - நடிகர் விவேக் இருந்தால், இப்படித்தான்...

ஹீரோக்கள், டைரக்டர்களை ஆட்டிப் படைக்கும் லேட்டஸ்ட் சென்டிமென்ட் – நடிகர் விவேக் இருந்தால், இப்படித்தான் கேட்டு இருப்பாரு

- Advertisement -

தமிழ் சினிமாவில் சமுதாயத்துக்கான பல நல்ல கருத்துகளை சொன்ன நிறைய படங்கள் ஒரு காலகட்டத்தில் வந்தன. இப்போதெல்லாம் கருத்து சொல்கிற படங்களை, தியேட்டர்களில் உள்ள ஆப்பரேட்டர்களே பார்க்க விரும்புவதில்லை. அதனால் கருத்து சொல்லும் படங்கள் விசு, பாலசந்தர், வி சேகர், சேரன், பாக்யராஜ் இயக்கிய படங்களோடு போய்விட்டன.

இதற்கிடையே தங்களது காமெடி காட்சிகளுக்கு இடையே நாகேஷ், கவுண்டமணி, விவேக் போன்ற சில காமெடி நடிகர்கள் அவ்வப்போது சமூகத்துக்கான சில நல்ல கருத்துகளை வெளிப்படுத்தி வந்தனர். அபசகுனம், மூட நம்பிக்கை, சென்டிமெண்ட் குறித்து மக்களின் எண்ணங்களை கிண்டலடித்து பேசினர்.

- Advertisement -

அந்த வகையில், நடிகர் விவேக் பல நல்ல கருத்துகளை சொல்லி வந்தார். அதனால் அவருக்கு சின்ன கலைவாணர் என்ற பட்டமே வழங்கப்பட்டது. அந்தளவுக்கு மக்களுக்கான சமூக சீர்திருத்த கருத்துகளை தனது காமெடிக்கு நடுவே பஞ்ச் டயலாக் ஆக பேசி விடுவார் விவேக். குறிப்பாக மூட நம்பிக்கைகளை தனக்கே உரிய பாணியில் கிண்டலடிப்பார் விவேக்.

இப்போது, கருங்காலி மாலை அணிவது குறித்த விளம்பரங்கள் அதிகரித்து வருகின்றன. கருங்காலி மாலை அணிந்துவிட்டால் உங்களுக்கு பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கையில் எந்த பிரச்னைகளுமே இருக்காது. எல்லா செயலும் வெற்றிக்கரமாக அமையும் என்று விளம்பரங்களில் கூறி வருவதால், பலரும் அதை வாங்கி நம்பிக்கையுடன் அணிந்து வருகின்றனர்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், தனுஷ், லோகேஷ் கனகராஜ், சிவகார்த்திகேயன், யோகிபாபு என பலரும் இப்போது கருங்காலி மாலைகளை அணிந்து வருகின்றனர். ஆன்மிக நாட்டமுள்ள ரஜினிகாந்த் அணிவது அதில் உள்ள மருத்தவ குணங்களை கவனத்தில் கொண்டுதான். ஆனால் மற்றவர்கள் அணிவது, பாசிட்டிவ் எனர்ஜிக்காக தான்.

இதில் தற்போது புதிதாக இயக்குநர் வெங்கட்பிரபுவும் சேர்ந்துவிட்டார். அவரும் விஜய் 68 படம் சிறப்பாக வர, பாசிட்டிவ் எனர்ஜியுடன் நான் செயல்பட வேண்டும் என, அவரும் கருங்காலி மாலை அணிந்துவிட்டார். இப்போது நடிகர் விவேக் இருந்தால், உள்ள 750 ஸ்பேர் ஸ்பார்ட்ஸ் இருக்கு, அதுல ஓடாத லாரி, இந்த எலுமிச்சம்பழத்துலயாடா ஓடப்போகுது என்பது போல, இந்த கருங்காலி மாலை அணிந்திருக்கும் ஹீரோக்கள், டைரக்டர்களை பார்த்து அதே பாணியில் கிண்டலாக கேட்டிருப்பார்.

- Advertisement -

சற்று முன்