- Advertisement -
Homeபொழுதுபோக்குஉத்தமவில்லன் படம் விவகாரத்தில் உலகநாயகன் எடுத்த திடீர் முடிவு, இப்படி ஒரு கிளைமாக்ஸை யாருமே எதிர்பார்க்கலையே...

உத்தமவில்லன் படம் விவகாரத்தில் உலகநாயகன் எடுத்த திடீர் முடிவு, இப்படி ஒரு கிளைமாக்ஸை யாருமே எதிர்பார்க்கலையே – தயாரிப்பாளரா யோசிச்சிருப்பாரோ…?

- Advertisement -

இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் தயாரித்த படம் உத்தம வில்லன், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்த படத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த் டைரக்ட் செய்திருந்தார். கமல்ஹாசன், பூஜாகுமார், ஊர்வசி, ஆண்ட்ரியா, நாசர் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இந்த படத்தின் திரைக்கதையில் கமல் நிறைய மாற்றங்கள் செய்ததாகவும், படத்தை நினைத்தபடி உருவாக்க கமல் விடவில்லை எனவும், தயாரிப்பாளரான டைரக்டர் லிங்குசாமி குறை கூறியிருந்தார். மேலும் இந்த படத்தை தயாரித்த வகையில் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு, கடனில் சிக்கி தவிப்பதாகவும் படம் ரிலீசான சில மாதங்களிலேயே அவர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து கமல்ஹாசனும், அவரது அண்ணன் சந்திரஹாசன் முன்னிலையில் இந்த படத்தின் நஷ்டத்துக்கு ஈடாக வேறு ஒரு படம் நடித்து தருவதாகவும் ஒப்பந்தம் எழுதி தந்திருந்தார். ஆனால் 9 ஆண்டுகளுக்கு மேலாகியும் அதன்படி திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு கமல் கால்ஷீட் தந்து புதிய படத்தில் நடித்து தரவில்லை.

இதுகுறித்து தொடர்ந்து நேர்காணல்களில் பேசி வந்த டைரக்டர் லிங்குசாமி, சமீபத்தில் இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். அதன்பிறகு இதுகுறித்து பஞ்சாயத்து பேசி ஒரு முடிவு எடுக்க கடந்த வாரத்தில் ஒரு நாள் முடிவானது. ஆனால் திமுக ஆதரவாளராக கமல் இருப்பதால் இந்த பஞ்சாயத்தில் பங்கேற்க சங்க நிர்வாகிகள் யாரும் அதிக ஆர்வம் காட்டவில்லை. அதனால் இதில் தீர்வும் எட்டப்படவில்லை.

நடிகர் கமல்ஹாசன், திமுக கூட்டணியில் சேர்ந்து சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தீவிர பிரசாரம் செய்தார். அத்துடன் ரெட் ஜெயின்ட் நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பிலும் இருக்கிறார். ஸ்டாலின், உதயநிதியுடன் நெருக்கமாக உள்ள கட்சி தலைவரான அவரை, இப்படி பஞ்சாயத்தில் நிறுத்தி பேசினால், அது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்துமே என கருதி, இந்த பஞ்சாயத்தில் பங்கேற்க தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முன்வரவில்லை.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனே, தயாரிப்பாளர் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகளை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து, இதுகுறித்து நேரடியான பேச்சு வார்த்தையில் கலந்துக்கொண்டுள்ளார். இதில் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாரா அல்லது நஷ்ட ஈடாக எதுவும் தொகை தருவதாக பேசினாரா என்ற விவரங்கள் விரைவில் வெளிச்சத்துக்கு வரும்.

சற்று முன்