- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் அரசியலுக்கு வரக் காரணமே நான்தான், மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஓபன்...

நடிகர் விஜய் அரசியலுக்கு வரக் காரணமே நான்தான், மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஓபன் ஸ்டேட்மென்ட் – என்னங்க உலக நாயகன் இப்படி சொல்றாரு?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பது, தமிழக மக்களின் பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. 1994களில் பாட்ஷா படம் வந்த போதே, ரஜினிதான் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் என்ற கோஷங்கள், ரசிகர்களின் மத்தியில் எழும்ப துவங்கியிருந்தன. மத்தியில் இருந்த பாஜகவும், பிரதமர் வாஜ்பாயும் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால் ரஜினிகாந்த் மறுத்துவிட்டார். சினிமா தான் என் பயணம் என்று கூறிய ரஜினி, அப்போது நடந்த சட்டசபை தேர்தலில் கருணாநிதி, ஜிகே மூப்பனார் கூட்டணிக்கு தன் ஆதரவை தெரிவித்தார். இனி ஒருமுறை ஜெயலலிதா ஜெயித்து தமிழ்நாட்டின் முதலமைச்சரானால், தமிழ்நாட்டை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என பரபரப்பான ஸ்டேட்மென்ட் விட்டார்.

- Advertisement -

அதற்கு பிறகு ரஜினி படம் ரிலீஸ் ஆகும் ஒவ்வொரு முறையும், தலைவா அரசியலுக்கு வா என ரஜினி ரசிகர்கள் போஸ்டர் அடிப்பதும், ரசிகர் மன்ற கூட்டங்களில் பேசுவதும் வழக்கமாக நடந்தது. ஆனால் கடைசி வரை ரஜினி அசைந்துக் கொடுக்கவில்லை. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், அரசியலுக்கு வருவது போல் போக்கு காட்டிவிட்டு அப்படியே எஸ்கேப் ஆகி விட்டார்.

ஆனால் நடிகர் கமல்ஹாசன், யாருமே எதிர்பார்க்காத ஒரு சூழலில் திடீரென மக்கள் நீதிமய்யம் என்ற கட்சியை ஆரம்பித்தார். மதுரையில் மாநாடு நடத்தினார். அதில் சிறப்பு விருந்தினராக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பங்கேற்க செய்தார். இப்போதும் அரசியல் களத்தில் சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

அதே போல் நடிகர் விஜயும் இப்போது அரசியல் களத்தில் குதித்து விட்டார். தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய அரசியல் கட்சி துவங்கியிருக்கும் அவர், 2026ம் ஆண்டில் நடக்கும் சட்டசபை தேர்தலில், தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு, முதல்வர் ஆவதே லட்சியம் என்கிறார். இதில் 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்கவும், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த் முடிவு செய்திருக்கிறார்.

இந்நிலையில் நேற்று நடிகர் கமல்ஹாசனை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது விஜயின் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், நடிப்பில் இருந்து ஒதுங்கி, விஜய் அரசியலுக்கு வருவது அவரது தனிப்பட்ட முடிவு. விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று சொன்னது நான்தான். அவரை அரசியலுக்கு முதன்முதலாக வரவேற்றதும் நான்தான், என்று பதிலளித்தார்.

- Advertisement -

சற்று முன்