சிவகார்த்தியேகன் நடித்த அயலான் படம் பொங்கலுக்கு எப்படியும் திரைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏலியன் படக்கதையான இது, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டதாக தெரிகிறது. இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் என்பதால் இந்த படமும் அதே போல் மாஸ் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதில் சாய்பல்லவி அவரது மனைவியாக நடிக்கிறார். மிலிட்டரி ஆபிசராக நடிக்கும் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் முதன்முறையாக அப்பா, மகன் கேரக்டரில் நடிப்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த படத்தின் கதையை கேட்டவுடனே கமலுக்கு மிகவும் பிடித்துப் போனதால் இந்த படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க உடனே ஒத்துக்கொண்டு இருக்கிறார். அதுமட்டுமின்றி காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்தவும் அவரது ராணுவ நண்பர்கள் மூலமாக ஏற்பாடுகளை செய்திருக்கிறார். கதையில் சில முக்கிய விஷயங்களை சொல்லிக் கொடுத்தும் ஆலோசனையும் தந்து வருகிறார்.
ஆனால் இதுவரை நடந்த படப்பிடிப்பில் ரூ, 25 கோடி வரை படத்துக்கு திட்டமிட்ட பட்ஜெட்டை விட கூடுதல் செலவானதால், கமல் சற்று அப்செட் ஆகியிருக்கிறார். அதே வேளயைில் இந்த படத்தை இணைந்து தயாரிக்கும் சோனி நிறுவனம் இந்த 25 கோடி ரூபாயை தரவும் மறுப்பு தெரிவித்தது மேலும் கமல்ஹாசனை மூடு அவுட் செய்துள்ளது. எனினும் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.
சமீபத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வெள்ள பாதிப்புக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் வழங்கினார் சிவகார்த்திகேயன். அப்போது அவர் இருந்த கெட்டப்பை பார்த்த போது, ராணுவ அதிகாரிகள் ஓடிடி பயிற்சி பெறும்போது இருக்கிற கெட்டப்பில் இருந்துள்ளார். எனவே, அதற்கான ஷூட்டிங்கில் அவர் கலந்துக்கொண்டிருப்பது உறுதியாகி உள்ளது.
மேலும் இந்த படத்தை எடுத்த வரையில் எப்படி இருக்கிறது என்பதை அறிய, கமல்ஹாசன் சிவகார்த்திகேயனின் படத்தை பார்த்திருக்கிறார். படத்தை பார்த்தவர் மிகவும் மகிழ்ச்சியடைந்து இருக்கிறார். கமல்ஹாசன் எதிர்பார்த்ததை விடவும் படம் சிறப்பாக இருப்பதை பார்த்து கமல் சந்தோஷப்பட்டதால், இந்த படம் இன்னும் பிரமாதமாக வரும் என்பது அவரது ரியாக்ஷனாக இருந்திருக்கிறது.





