நடிகர் கமல்ஹாசன், உலகமே பார்த்து வியக்கும் ஒரு உன்னத திரைக்கலைஞன். தமிழ் சினிமாவை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு சென்று உலக சினிமா தரத்தில் உயர்த்த பாடுபட்டவர். கமல்ஹாசனின் திரைமொழி என்பது வேற லெவல்தான். அன்பே சிவம், மூன்றாம் பிறை, இந்தியன் போன்றவை எல்லாம் யாரும் எட்டவே முடியாத உச்சத்தின் உச்சம். இப்போதும் அவரது நிழலை கூட நெருங்க யாரும் சினிமாவில் இல்லை.
அப்படிப்பட்ட பெருமைக்கும், சிறப்புக்கும் உரிய கமல்ஹாசன், கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் திடீரென ஒரு அரசியல் அவதாரம் எடுத்தார். சினிமாவில் கூட அரசியல்வாதியாக அதிகம் நடிக்காத அவர், நிஜ வாழ்க்கையில் மக்கள் நீதிமய்யம் என்ற அரசியல் கட்சியை துவக்கி, அரசியல் தலைவரானார். மதுரையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அழைத்து வந்து மாநாடு நடத்தினார்.
சினிமா நடிகராக மக்களின் மனங்களை வென்ற கமல்ஹாசனுக்கு, அரசியல் கட்சி தலைவராக மக்களின் நிழலை கூட நெருங்க முடியவில்லை. ஏனெனில் எம்ஜிஆர், விஜயகாந்துக்கு பிறகு மற்றவர்களை அப்படி ஒரு மக்கள் தலைவனாக பார்க்க மக்களுக்கு விருப்பமில்லை. ஏனெனில் அந்தளவுக்கு அவர்களது கடந்த கால வாழ்க்கை பெருமைக்குரியதாக இல்லை.
அதிலும் நடிகர் கமல்ஹாசன், 2 திருமணங்கள் செய்து மனைவிகளை விவாகரத்து செய்தவர். தாலி கட்டாமல் 17 ஆண்டுகள் நடிகை கவுதமியுடன் குடும்பம் நடத்தியவர். ஆண்ட்ரியா, பூஜாகுமார், சிம்ரன் போன்றவர்களுடன் தொடர்பில் இருப்பவர் என்ற நிலையில், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கக்கேடு நிறைந்தவர் என்பதால் அவரை தலைவனாக பார்க்க மக்கள் விரும்பவில்லை.
மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கிய போது, நடிகர் கமல்ஹாசன் ஸ்டாலின் பேசிய டிவியை, டார்ச் லைட்டை வீசி அடித்து நொறுக்கினார். நான் தராசு முள் போன்றவன். மக்கள் மனங்களில் மாற்றம் வேண்டும். வாரிசு அரசியல் கூடாது. நாட்டில் மாற்றம் வேண்டும். அதுதான் என் லட்சியம் என்றெல்லாம் பயங்கரமாக டயலாக் பேசியதை கேட்டு மக்கள் புல்லரித்து போயினர்.
அதுமட்டுமின்றி விஜய் டிவியில் பிக்பாஸ் மேடைகளிலும் கமல், அரசியல்வாதியாக பேசி நிறைய அப்ளாஸ் வாங்கினார். கடைசியில் இப்போது திமுக தந்த ஒரு ராஜ்ய சபா சீட்டை பெற்றுக்கொண்டு, இந்த தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய கிளம்பி விட்டார். கடைசியில், திமுகவுக்கு ஆதரவாக 2011ல் பிரசாரம் செய்த வைகை புயல் வடிவேலுவுக்கும், 2024ல் பிரசாரம் செய்யும் உலக நாயகன் கமலுக்கும் வித்யாசனம் இல்லை. இப்படி அரசியல் சப்பாணியாக ஆண்டவர் மாறிவிட்டாரே, என அவரது ரசிகர்கள் வேதனையில் புலம்புகின்றனர்.





