- Advertisement -
Homeபொழுதுபோக்குஆளே அடையாளம் தெரியலையே ப்பா.. நம்ம கமல் ஹாசனா இது.. இணையத்தை கலக்கும் இந்தியன் 2...

ஆளே அடையாளம் தெரியலையே ப்பா.. நம்ம கமல் ஹாசனா இது.. இணையத்தை கலக்கும் இந்தியன் 2 போஸ்டர்

- Advertisement -

ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். ஊழலை மையப்படுத்தியும் அதை தட்டிக்கேட்கும் சுதந்திரப் போராட்ட தியாகி பற்றியும் படத்தில் பேசப்பட்டிருக்கும். சுஜாதா வசனம் எழுத ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர் படம் அதிரபுதிரி ஹிட் அடித்தது.

படத்தில் வரும் வர்மக்கலையும் கமல்ஹாசனின் கெட்டப்பும் இன்றுவரை பலரது பேவரைட். கமல் ஹாசன்தனது கெட்டப்பிலும் தனது நடிப்பிலும் தனித்துவம் காட்டியிருந்தார் பல வருடங்கள் கழித்து இந்தியன் 2 படத்தை உருவாக்குவதற்கு சங்கர் திட்டமிட்டார். லைகா நிறுவனம் தயாரிக்க கமல் ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்னர் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது.

- Advertisement -

ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஷங்கரின் உதவி இயக்குனர்கள் உயிரிழந்தனர். அதனை அடுத்து படமானது கிடப்பில் போடப்பட்டது. இதற்கிடையே கமல்ஹாசன் அரசியலில் தீவிர கவனம் செலுத்திவிட்டு பிறகு விக்ரம் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார்.

விக்ரம் ஹிட் ஆனதை அடுத்து கிடப்பில் இருந்த இந்தியன் 2 மீண்டும் தூசி தட்டப்பட்டது. தயாரிப்பதற்கு ரெட் ஜெயன்ட் மூவிஸும் களமிறங்கியது. அதனை தொடர்ந்து ஷூட்டிங் மும்முரமாக இந்தியா மட்டுமின்றி தென்னாப்பிரிக்கா,தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் நடந்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சூரத்தில் நடந்த போர்ஷனை ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்த தற்போது இயக்குனராக இருக்கும் வசந்தபாலன் இயக்கியிருக்கிறார்.

- Advertisement -

படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். சமீபத்தில்கூட அனிருத் இசையமைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் கண்டானது. படமானது விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று இந்தியாவின் 76வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அதனை ஒட்டி இந்தியன் 2 வில் இருந்து புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. அதில் கமல்ஹாசன் இந்தியன் தாத்தா கெட்டப்பில் ஆளே அடையாளம் தெரியாத அளவில் பட்டாசாக இருக்கிறார். அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

இதற்கிடையே படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது விவேக்கும், நெடுமுடி வேணும் இறந்து போனார்கள். இதன் காரணமாக ஒரு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்கள் இருவரையும் படத்தில் ஷங்கர் நடிக்க வைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்