- Advertisement -
Homeபொழுதுபோக்குகமல் படத்திற்காக பக்கா ஸ்கெட்ச் போடும் மணிரத்னம்... இத்தனை நட்சத்திரங்கள் நடிக்கப் போகிறார்களா என ஆச்சரியத்தில்...

கமல் படத்திற்காக பக்கா ஸ்கெட்ச் போடும் மணிரத்னம்… இத்தனை நட்சத்திரங்கள் நடிக்கப் போகிறார்களா என ஆச்சரியத்தில் தமிழ் திரையுலகம்… யாரெல்லாம்னு கேட்டா நீங்களே அசந்து போவீங்க…

- Advertisement -

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் விக்ரம். பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி வசூலில் சக்கை போடு போட்டது. சந்தானம் எனும் கேரக்டரில் வந்த விஜய் சேதுபதி, தனது வில்லத்தனமான நடிப்பின் மூலம் மிரட்டி இருந்தார்.

விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடைந்ததற்கு முழுக்க முழுக்க காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் புதிய யுக்தி தான். ஏற்கனவே கைதி திரைப்படத்தை இயக்கியிருந்த அவர், போதைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் ஒரு பக்கம், அதை கைப்பற்ற துடிக்கும் வில்லன்கள் ஒரு பக்கம் இதற்கு நடுவில் போலீசாருக்கு உதவும் சிறையில் இருந்து வெளிவந்த கதாநாயகன் ஒரு பக்கம் என அசத்தி இருந்தார்.

- Advertisement -

இந்த படத்தின் சில கதாபாத்திரங்களை, விக்ரம் படத்தில் புகுத்தி கைதியின் காட்சிகளை வைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். குறிப்பாக கிளைமாக்ஸில் முக்கிய வில்லனாக ரோலக்ஸ் என்னும் கதாபாத்திரத்தில் சூர்யா வருகை தந்தது, படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய தூண்டுகோலாய் அமைந்தது.

இதன் வெற்றியால் பெரு மகிழ்ச்சி அடைந்த கமல்ஹாசன், படத்தில் இடம்பெற்ற முக்கிய நட்சத்திரங்களுக்கு பரிசளித்து கௌரவப்படுத்தினார். தொடர்ந்து, தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரிக்கும் வேலையிலும் அவர் இறங்கி இருக்கிறார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, சிவகார்த்திகேயனுடன் இணைந்திருக்கும் திரைப்படத்தை கமல்ஹாசன்தான் தயாரித்து வருகிறார்.

- Advertisement -

இதேபோல், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் இயக்குனரான தேசிங்கு பெரியசாமி, சிம்புவுடன் இணையும் திரைப்படத்தையும் கமல்ஹாசனே தயாரிக்கிறார். இதுபோக நடிப்பிலும் ஆர்வம் காட்டி வரும் அவர், அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் ராணுவ பின்னணி கொண்ட படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் பிறகு இயக்குனர் மணிரத்னம் கமல் இணைய உள்ளார்.

நாயகன் திரைப்படத்திற்கு பிறகு, 36 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைய இருப்பதால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் வில்லனாக சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது, திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோரும் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் உற்சாகமடைந்துள்ள ரசிகர்கள், படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்