- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் பெரிய தப்பு பண்ணிட்டேன், அமரன் படம் பார்த்த பின், சிம்பு பட இயக்குனர் சொன்ன...

நான் பெரிய தப்பு பண்ணிட்டேன், அமரன் படம் பார்த்த பின், சிம்பு பட இயக்குனர் சொன்ன தகவல் – பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான படம் அமரன். இந்த படம் தீபாவளி பண்டிகை தினமான நேற்று வெளியாகி, உலகம் முழுவதும் முதல் நாளில் 42.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமே முதல் நாளில் 13 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

அமரன் படத்துக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களில், இந்த படம் தான் அவரது சினிமா பயணத்தில் அடையாளம் சொல்லும் படமாக இருக்கிறது என்று ரசிகர்கள் கூறியிருக்கின்றனர். உணர்வும், வீரமும் மிக்க இந்த படத்தில் வேற லெவலில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பதாக பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் அமரன் படம் பார்த்த இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அஸ்வத் மாரிமுத்து ஓ மை கடவுளே டிராகன் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது அவர் சிம்பு நடிக்கும் அவரது 49வது படத்தை டைரக்ட் செய்ய இருக்கிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

அமரன் படம் பார்த்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து பாராட்டு தெரிவித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, நான் ராணுவத்தில் சேர வேண்டும் என்று என் பெற்றோர் ஆசைப்பட்டனர். நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றாலும் நான் ராணுவத்திற்கு செல்ல பயந்தேன். இன்று அமரன் படத்தை பார்த்த பிறகு தவறான முடிவை எடுத்து விட்டேனோ என்று தோன்றுகிறது. நான் அங்கு சென்றிருக்க வேண்டும்.

- Advertisement -

வாழ்க்கை வீரம் நிறைந்தது. சிவகார்த்திகேயன் அதை முழுமையாக்கி உள்ளார். சாய்பல்லவி போலவே நானும் அழுதேன். எல்லா விஷயங்களிலும் சிறப்பாக செயல்பட்டதற்காக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை கொண்டாட வேண்டும். இது எளிதான விஷயம் இல்லை என்று அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

சிம்பு பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல் டிமாண்டி காலனி பட இயக்குனர் அஜய் ஞானமுத்துவும் அமரன் படத்தை பாராட்டியுள்ளார். ஏற்கனவே அமரன் படத்தை பார்த்த தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் அமரன் படத்தை வெகுவாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்