- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயுடன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கிறாரா? விரைவில் அறிவிப்பு வரலாம் - ஆனா படத்துல வர்ற கதையே...

விஜயுடன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கிறாரா? விரைவில் அறிவிப்பு வரலாம் – ஆனா படத்துல வர்ற கதையே அவரோடுதான்னு சொல்றாங்களே?

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகளை டைரக்டர் வெங்கட்பிரபு மேற்கொண்டு வருகிறார். தி கோட் படத்தின் 3வது சிங்கிள் வருகிற ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாக உள்ளது.

நடிகர் விஜயின் அடுத்த படம், அதாவது அவர் நடிக்கப் போகும் கடைசி படம் விஜய் 69 படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்குகிறார். இந்த படத்தை கேவிஎம் புரடக்சன்ஸ் தயாரிக்க உள்ளது. முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் இந்த படம் எடுக்கப்படுகிறது. இதில் அரசியல்வாதியாக விஜய் நடித்து பல அரசியல் கருத்துகளை, வசனங்களை பேச இருக்கிறார்.

- Advertisement -

இந்த படம் அரசியல் படமாக உருவாவதற்கு மிக முக்கிய காரணம், இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கப் போவது இல்லை. நேரடியாக தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பணிகளை கவனிக்கப் போகிறார். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தேவையான வியூகங்களை வகுத்து, மக்களை சந்தித்து தனக்கான ஆதரவை திரட்ட திட்டமிட்டுள்ளார்.

விஜய் நடிக்கும் கடைசி படத்தை மிகச் சிறப்பான ஒரு படமாக உருவாக்க எச் வினோத் திட்டமிட்டுள்ளார். ஆனால் ஏற்கனவே நடிகர் கமல்ஹாசன் நடிப்பதாக இருந்த ஒரு அரசியல் கதையை தான் இப்போது விஜய்க்காக அவர் வடிவமைத்துள்ளார். அதே நேரத்தில் இந்த கதை டிஸ்கஷனில் நடிகர் கமலும் பல கருத்துகளை, விஷயங்களை சொல்லி அந்த கதையை உருவாக்கம் செய்திருக்கிறார்.

- Advertisement -

அந்த வகையில், கமல் உருவாக்கிய அரசியல் கதையில்தான் விஜய் நடிக்கிறார் என்பது யாருமே மறுக்க முடியாத உண்மை. ஏனெனில் கமல் நடிக்காத பட்சத்தில், இன்னும் 2 ஆண்டுகள் எச் வினோத்தை அவர் காத்திருக்க சொன்ன நிலையில்தான், அவருக்கான கதையில் விஜயை நடிக்க வைத்து இயக்குகிறார் எச் வினோத் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் நடிக்கும் இந்த படத்தில் மிக முக்கியமான கேரக்டர் உள்ளது. அதில் முதலில் மோகன்லாலை நடிக்க வைக்க எச் வினோத் திட்டமிட்டார். ஆனால் மோகன்லால் நடித்தால், ஜில்லா 2 படம் போல தோன்றிவிடும் என்பதால், கமலை அந்த கேரக்டரில் நடிக்க வைக்க எச் வினோத் விரும்புகிறார். ஆனால் இதை விஜய் ஏற்பாரா, கமல் அதற்கு சம்மதிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் இது அரசியல் படம், விஜய் கமல் இணைந்து அரசியல் களத்தில் பணிசெய்வார்கள் என்ற பார்வை மக்களுக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்றும் விஜய் யோசிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்