- Advertisement -
Homeபொழுதுபோக்குதேரை இழுத்து தெருவில் விட்ட கதையாக… - கமல் பேச்சுக்கு கட்டுப்படாத சிவகார்த்திகேயன் - இப்படியே...

தேரை இழுத்து தெருவில் விட்ட கதையாக… – கமல் பேச்சுக்கு கட்டுப்படாத சிவகார்த்திகேயன் – இப்படியே போனா இது எண்டு கார்டே இல்லையா?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் இப்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் தக்லைப் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு, மக்கள் நீதி மய்யம் ஆதரவு அளிப்பதால், தொகுதி வாரியாக கமல் பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறார். அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

கமல்ஹாசனின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல் நடிக்கும் படங்களும் தயாரிக்கப்படுகின்றன. அபூர்வ சகோதரர்கள், விக்ரம், தேவர்மகன், விருமாண்டி, ஹேராம் போன்றவை கமல்ஹாசன் நிறுவனம் தயாரித்த படங்கள்தான். அதேபோல் சத்யராஜ் நடித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்தை தயாரித்ததும் கமல்தான்.

- Advertisement -

தனது படங்கள் மட்டுமின்றி பிற நடிகர்கள் நடிக்கும் படங்களையும் கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பது வழக்கம்தான். இப்போது சிலம்பரசன் நடிக்கும் எஸ்டிஆர் 48 படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி டைரக்ட் செய்கிறார். விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்துக்கான ஆரம்ப கட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

அதே போல் நடிகர் சிவகார்த்தியேகன் சாய்பல்லவி நடிக்கும் அமரன் படத்தை, கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி தரும் ராணுவ அதிகாரியாக சிவகார்த்திகேயன் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியானது. இந்த படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து வேகமாக நடந்து வருகிறது 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது.

- Advertisement -

இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கிய ஆரம்பத்திலேயே படத்தின் பட்ஜெட் குறித்து, கமல் பட நிறுவனம் தெளிவாக படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, ஹீரோ சிவகார்த்திகேயனுக்கு அறிவுறுத்தி விட்டது, துவக்கத்திலேயே படத்தின் பட்ஜெட்டை மீறி பல கோடி செலவு செய்ததால் கமல்ஹாசனே இருவரையும் அழைத்து, இதுகுறித்து பேசி எச்சரித்தும் உள்ளார்.

இந்நிலையில் லேட்டஸ்ட் நிலவரப்படி அமரன் ஷூட்டிங்கில் நிர்ணயித்த பட்ஜெட்டை விட ரூ. 25 கோடி அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டிய நிலையில் இன்னும் பல கோடிகள் செலவாகும் எனத் தெரிய வந்துள்ளது. இப்படி போட்ட பட்ஜெட்டை மீறி சிவகார்த்திகேயனும், ராஜ்குமார் பெரியசாமியும் செயல்படுவதால் பயங்கர அப்செட்டில் இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

- Advertisement -

சற்று முன்