- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிகாந்துடன் இணையப் போகிறேன்... அதிரடியாக அப்டேட் கொடுத்த கமல்ஹாசன்... அசந்து போய் நிற்கும் தமிழ் திரை...

ரஜினிகாந்துடன் இணையப் போகிறேன்… அதிரடியாக அப்டேட் கொடுத்த கமல்ஹாசன்… அசந்து போய் நிற்கும் தமிழ் திரை உலகம்…

- Advertisement -

தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே மூத்த நடிகர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருக்கின்றனர். 1980களில் இருந்து தற்போது வரை இவர்களது வெற்றிப் பயணம் தொடர்ந்து வருகிறது. இன்றைய இளம் தலைமுறையினருக்கு பிடிக்கும் வகையில் அவர்கள் திரைப்படங்களை கொடுத்து வருகின்றனர்.

அண்மையில் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த இந்த திரைப்படம் மிகப் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் கலவையான விமர்சனத்தை பெற்றது. படத்தின் திரைக்கதை தொய்வாக இருந்ததாகவும், லாஜிக் மீறல்கள் அதிகம் இருந்தது என்றும் பலர் கருத்து தெரிவித்தனர்.

- Advertisement -

இருப்பினும் இது வசூலை பாதிக்கவில்லை என்றே சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய்க்கு மேல் கூலி திரைப்படம் வசூல் செய்திருப்பதாக பேசுகிறார்கள். இதேபோல் அண்மையில் கமல்ஹாசனுக்கும் தக் லைப் திரைப்படம் வெளியானது. மணிரத்னம் இயக்கியிருந்த இந்த திரைப்படத்தில் சிலம்பரசன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால் கலவையான விமர்சனத்தை பெற்ற இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியையும் வசூலையும் பெறவில்லை. இப்படியான சூழலில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. அதனை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவதாகவும் பேசினார்கள். இதைக் கேட்டு தமிழ் திரை உலகமே ஆடிப் போனது.

- Advertisement -

கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கே லோகேஷ் கனகராஜ் தயாராகி வந்த நிலையில், தற்போது அதனை அவர் ஓரங்கட்டி வைத்து விட்டு கமல்ஹாசன் மற்றும் ரஜினியை வைத்து படம் இயக்க இருப்பதாக பலரும் சொன்னார்கள். இதனை ராஜ்கமல் ஃபிலிம் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிப்பதாக சொல்லப்பட்டது. இப்படியான சூழலில் ரஜினியுடன் இணைய போவதை உறுதிப்படுத்தி இருக்கிறார் கமல்ஹாசன்.

நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட அதற்கு பதில் கூறிய கமலஹாசன், நாங்கள் இத்தனை நாட்கள் விரும்பிதான் பிரிந்து இருந்தோம். நாங்கள் இணைந்து பணிபுரிய இருக்கிறோம். எங்களுக்கு இடையே போட்டியை ஏற்படுத்தியது நீங்கள்தான். நாங்கள் முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அதன்படியேதான் அவரும் இருக்கிறார். நானும் இருக்கிறேன். இருவரும் சேர இருக்கிறார்கள் என்பது பொருளாதார ரீதியாக ஆச்சரியமாக இருக்கலாம் என்பதை தவிர, எங்களுக்கு இது எப்போதோ நடக்க வேண்டியதுதான் என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த திரைப்படத்தை லோகேஷ்தான் இயக்கப் போகிறாரா என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

- Advertisement -

சற்று முன்