- Advertisement -
Homeபொழுதுபோக்குமாரீசன் திரைப்படத்தை புகழ்ந்து தள்ளிய கமல்ஹாசன்... அடேங்கப்பா அவரே சொல்லிட்டார்னா படம் வேற லெவல்தான் போலயே...

மாரீசன் திரைப்படத்தை புகழ்ந்து தள்ளிய கமல்ஹாசன்… அடேங்கப்பா அவரே சொல்லிட்டார்னா படம் வேற லெவல்தான் போலயே…

- Advertisement -

தமிழ் சினிமாவில் வேலைக்காரன் சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் பகத் பாசில். குறிப்பாக விக்ரம் திரைப்படத்தில் அவரது நடிப்பு பாராட்டை பெற்றது. படத்தின் முதல் பாதிலும் சரி இரண்டாம் பாதியிலும் சரி தனக்கான பங்களிப்பை மிகச் சிறப்பாக கொடுத்து இருப்பார் ஃபகத் பாசில்.

இதேபோல் மாமன்னன் திரைப்படத்திலும் பகத் பாஸில் பட்டையை கிளப்பி இருந்தார். அதில் ரத்தினவேல் என்னும் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு, வடிவேலு கதாபாத்திரம் பற்றி பலரும் பேசி வந்தார்கள். நகைச்சுவை என்னும் ட்ராக்கில் இருந்து விலகி, அவர் வேறு ஒரு ஜானரை கையில் எடுத்ததால் வடிவேலு கதாபாத்திரம் ஆர்வத்தை தூண்டியது.

- Advertisement -

ஆனால் படம் வெளியான பிறகு அது முற்றிலும் மாறிப்போனது. பலரும் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டிய ரத்னவேலை பற்றியே பேச ஆரம்பித்தார்கள். அந்த திரைப்படமும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படியான சூழலில் தற்போது மீண்டும் வடிவேலு மற்றும் பகத் பாசில் ஜோடி இணைந்து இருக்கிறது.

மாரீசன் என இதற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சுதீஷ் சங்கர் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் இதனை தயாரித்துள்ளது. ட்ராவலை மையப்படுத்தி இந்த திரைப்படத்தின் கதையை அமைத்திருக்கிறார்கள். நாகர்கோவிலில் இருந்து திருவண்ணாமலை வரை நடக்கும் பயணத்தின் கதைதான் இது.

- Advertisement -

அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வடிவேலுவிடம் ஏராளமான பணம் இருப்பதை அறிந்து கொள்கிறார் பகத் பாசில். அவர் திருவண்ணாமலை செல்ல வேண்டும் எனக் கூறும் போது, தானே இருசக்கர வாகனத்தில் சென்று விடுவதாக கூறி, அவரிடம் பணத்தைப் பறிக்க முயல்கிறார். இதன் பிறகு நடக்கும் சஸ்பென்ஸ் நிறைந்த கதைதான் மாரீசன்.

இந்தத் திரைப்படத்தின் பிரீமியர் ஷோ நேற்று திரையிடப்பட்ட நிலையில் பலரும் அதற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்திருக்கின்றனர். உலகநாயகன் கமல்ஹாசனும் படம் நன்றாக இருப்பதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், படத்தின் கதை தன்னை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்ததாக தெரிவித்துள்ளார். மிகவும் அருமையான படைப்பை கொடுத்த படக்குழுவினருக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறி இருக்கிறார் கமல்ஹாசன்.

- Advertisement -

சற்று முன்