- Advertisement -
Homeபொழுதுபோக்குகைவிடப்படுகிறதா கமல்ஹாசன் ஹெச் வினோத் கதை... குழப்பத்தில் ரசிகர்கள்...

கைவிடப்படுகிறதா கமல்ஹாசன் ஹெச் வினோத் கதை… குழப்பத்தில் ரசிகர்கள்…

- Advertisement -

விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, படங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் கமல்ஹாசன். தனது ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலம், சிவகார்த்திகேயன் படத்தையும் சிம்பு படத்தையும் அவர் இயக்கி வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் திரைப்படம் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வருகிறது.

இதற்கான சூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பொங்கல் தினத்தை முன்னிட்டு டைட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் சிம்பு தேசிங்கு பெரியசாமி கூட்டணியில் உருவாகும் படத்தையும் தயாரிக்கிறார் கமல்ஹாசன். இதற்கான பணிகள் இன்னும் சிறிது வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதனிடையே தயாரிப்பு மட்டுமல்லாமல் நடிப்பிலும் மீண்டும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் கமல்ஹாசன். அடுத்தடுத்து அவர் இரண்டு திரைப்படங்களில் கமிட்டாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் எச் வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கப் போவதாக வெளியான அறிவிப்பு பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. இந்த திரைப்படம் அரசியல் பின்னணியில், உருவாக இருப்பதாக பேசப்பட்டது.

இதேபோல் மணிரத்னம் படத்திலும் கமல்ஹாசன் கமிட் ஆனார். நாயகன் திரைப்படத்திற்கு பிறகு, கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் கழித்து இருவரும் இணையப் போகும் அறிவிப்பால் எதிர்பார்ப்பு எகிறிது. இந்தப் படத்திற்கு தக் லைஃப் என பெயரிடப்பட்டுள்ளது. இதில், துல்கர் சல்மான், ஜெயம் ரவி, திரிஷா, கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். இது போக தெலுங்கில் பிரபாஸின் கல்கி திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் கமல் நடிக்கிறார்.

- Advertisement -

இதனிடையே, வினோத் திரைப்படத்தை முடித்த பிறகு மணிரத்னம் படத்தின் சூட்டிங் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது, மணிரத்னம் படத்திற்கான வேலைகள் சூடு பிடித்திருப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள கல்லூரியில் தொடங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி என்றால் வினோத்தின் திரைப்படம் என்ன ஆனது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அவரும் திடீரென தீரன் படத்தில் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், கமல்ஹாசன் எச் வினோத் திரைப்படம் கைவிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கமல்ஹாசனுக்கு, போலீஸ் சம்பந்தப்பட்ட கதையை தான் வினோத் கூறியதாகவும், ஆனால் தற்போதைக்கு அதில் நடிக்க கமல்ஹாசனுக்கு விருப்பம் இல்லை என்றும் கூறப்படுகிறது. அதேசமயம் கமல்ஹாசன் எச் வினோத் திரைப்படம் கைவிடப்படவில்லை என்றும், மணிரத்னம் படத்தை முடித்த பிறகு கமல் இதனை தொடர்வார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

- Advertisement -

சற்று முன்