- Advertisement -
Homeபொழுதுபோக்குகடும் தாக்குதலில் ஈடுபட்டாரா சுந்தரா டிராவல்ஸ் நடிகை? காயம்பட்டவர் மருத்துவமனையில் அனுமதி; போலீசார் விசாரணையால்...

கடும் தாக்குதலில் ஈடுபட்டாரா சுந்தரா டிராவல்ஸ் நடிகை? காயம்பட்டவர் மருத்துவமனையில் அனுமதி; போலீசார் விசாரணையால் கோலிவுட்டில் பரபரப்பு

- Advertisement -

தமிழ் சினிமாவில் சுந்தரா டிராவல்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதா. கடந்த 2002 ஆம் ஆண்டில் வெளிவந்த சுந்தரா ட்ராவல்ஸ் என்ற படத்தில் ராதா, முரளிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதற்கு முன்பே சில டிவி விளம்பரங்களிலும் ராதா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுந்தரா டிராவல்ஸ் படம், நடிகர் முரளி – வடிவேலு காமெடி கூட்டணியில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இந்த படத்தை தொடர்ந்து மானஸ்தன், காத்தவராயன் உள்ளிட்ட சில படங்களில் நடித்த ராதா, பிறகு பெரிய அளவில் சினிமா வாய்ப்புகளை பெற முடியவில்லை. அதன் பிறகு சில சீரியல்களில் அவர் நடிக்க ஆரம்பித்தார். குறிப்பாக பாரதி கண்ணம்மா 2 என்ற சீரியலில், அவர் வில்லி கேரக்டரில் நடித்திருந்தார்.

- Advertisement -

சமீபத்தில் நடிகை ராதாவும், மற்றொரு பிரபல நடிகையான நிவேதா பெத்துராஜும் முக ஜாடையில் ஒரே மாதிரி இருப்பதால், இருவரும் அக்கா தங்கை என்ற ஒரு பரபரப்பான தகவல், சமூக வலைதளங்களில் அனல் பறந்தது. ஆனால் உண்மையில் ராதாவும், நிவேதா பெத்துராஜூக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது பின்னர் தெரிய வந்தது.

இந்நிலையில் வடபழனியை சேர்ந்த முரளிகிருஷ்ணா என்பவருக்கும், சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதாவுக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏதோ பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. தன்னை நேரில் சந்திக்க வருமாறு அழைத்த ராதாவை, நேரில் சந்திக்க சென்றபோது அவர் கடுமையாக தாக்கியதாகவும், அதனால் பலத்த காயமடைந்ததாகவும் கூறி முரளி கிருஷ்ணா வடபழனி போலீசில் புகார் அளித்துள்ளார். காயம் பட்ட அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

நடிகை ராதா ஏற்கனவே திருமணமாகி, கணவருடன் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக, அவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், அவர் ஏற்கனவே ஆறு வருடங்கள் தன்னுடன் தாலிகட்டாமல் குடும்பம் நடத்திய ஒருவர், தன்னை திருமணம் செய்துக்கொள்ள மறுப்பதாக போலீசில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.

மேலும் மத்திய புழல் சிறையில் இருந்து வைரம் என்ற கும்பல், சினிமா தயாரிப்பாளர் முனிவேலுடன் தனக்கு இருக்கும் உறவு குறித்து போனில் அழைத்து மிரட்டியதாகவும், போலீசில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இப்படி தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கிய நடிகை ராதா, இப்போது முரளி கிருஷ்ணா என்பவரை தாக்கிய புகாரிலும் சிக்கியதால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்