- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 2 வின் ரிலீஸ் மாற்று தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு... முதல் பாடல் எப்போ வருகிறது...

இந்தியன் 2 வின் ரிலீஸ் மாற்று தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு… முதல் பாடல் எப்போ வருகிறது தெரியுமா…

- Advertisement -

இந்த ஆண்டு வெளியாகும் திரைப்படங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் இந்தியன் 2. கொரோனா காலகட்டத்திற்கு முன்பே இதன் சூட்டிங் பணிகள் தொடங்கின. ஆனால் தயாரிப்பு நிறுவனத்துடன் இயக்குனர் சங்கருக்கு ஏற்பட்ட உரசல் காரணமாக பணிகள் தடை பட்டன.

 

- Advertisement -

இதே போல் இயக்குனர் சங்கருக்கும், கமல்ஹாசனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல் ஈவி ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, கிரேன் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். இப்படி இந்தியன் டு ஆரம்பித்ததில் இருந்து ஏராளமான தடைகளை கண்டது.

 

- Advertisement -

தயாரிப்பு நிறுவனமான லைக்காவிற்கும் சங்கருக்கும் இடையேயான முதல் நீதிமன்றம் வரை சென்ற நிலையில், ஒரு கட்டத்தில் இருவரும் சமரசமாகி படப்பிடிப்பிற்கு சென்றனர். இதன் பிறகு சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றது. சென்னை ஆந்திரா மற்றும் வெளிநாடு என ஏராளமான பகுதிகளில் இதன் சூட்டிங்கை நடத்தினார் சங்கர்.

 

படத்திற்கான நடிகர் நடிகைகளும் அதிகரித்த வண்ணம் இருந்தனர். ரகுல் பிரீத் சிங், காஜா அகர்வால், பிரியா பவானி சங்கர் என மூன்று ஹீரோயின்கள் இந்தியன் 2 வில் நடிக்கின்றனர். இது போக சித்தார்த் பாபி சிம்ஹா உள்ளிட்டோரும் படத்தில் உள்ளனர். மறைந்த நடிகர்களான விவேக் நெடுமுடி வேணு மனோபாலா ஆகியோரும் இந்த திரைப்படத்தில் இருக்கின்றனர்.

 

முதல் பாகத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தை எடுக்கும்போதே அதன் மூன்றாம் பாகத்தையும் சங்கர் எடுத்திருக்கிறாராம். இந்தியன் 2 திரையிடப்படும் போது அதன் கிளைமாக்ஸில், பார்ட் 3க்கான ட்ரெய்லர் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

 

முதலில் இந்தியன் 2 திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்படுவதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அதனை இயக்குனர் சங்கர் உறுதிப்படுத்தி இருக்கிறார். அதன்படி இந்தியன் 2 திரைப்படம் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் இருந்து முதல் பாடல் வரும் 22ஆம் தேதி வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்