கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த இந்தியன் டு திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. ஆனால் முந்தைய திரைப்படத்தின் தாக்கம் இதில் துளி கூட இல்லாததால் படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பை கொடுக்கவில்லை.
அது மட்டுமல்ல தொய்வான திரைக்கதை மற்றும் மிக சுமாரான வசனங்களால் இந்தியன் 2 திரைப்படத்தை இணையத்தில் ட்ரோல் மெட்டீரியல் ஆக்கிவிட்டார்கள். உலகநாயகன் திரைப்படத்திற்கே இந்த கதியா என்று ஒரு சிலர் கருத்து தெரிவித்ததை நம்மால் பார்க்க முடிந்தது.
இந்த நிலையில், தற்போது தக் லைப் திரைப்படத்தில் தனக்கான பணிகளை முடித்து இருக்கிறார் கமல்ஹாசன். மணிரத்னம் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் சிம்பு, அசோக் செல்வன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மிகக் குறுகிய காலத்தில் இதன் திரைப்பட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ளது.
அடுத்ததாக, சண்டை பயிற்சி இயக்குனர்கள் அன்பறிவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். அனிருத் இதற்கு இசையமைக்கிறார். முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக இது உருவாக இருக்கிறது. இந்த நிலையில் கமல்ஹாசன் மீண்டும் ஒரு ஹிந்தி திரைப்படத்தின் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.
இந்தப் படத்தை இயக்கப் போவது வேறு யாரும் அல்ல, விஜயை வைத்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்த அட்லி தான். ஜவான் திரைப்படத்தின் மூலம் இந்தி திரை உலகத்திற்கு பயணம் ஆன அவர், அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். தனது மனைவியுடன் அங்கு ஒரு பங்களாவை வாங்கி வசித்து வருகிறார்.
ஷாருக் கானை வைத்து ஆயிரம் கோடி ரூபாய் வசூல் ஈட்டிய அட்லி அடுத்ததாக சல்மான் கானை வைத்து இயக்குகிறார். இதில்தான் கமல்ஹாசனுக்கு முக்கிய வேடம் என்று கூறப்படுகிறது. தற்போது சல்மான் கான் முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் படத்தில் நடித்து வருகிறார். இதன்பிறகு இதன் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய அட்லி திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.





