- Advertisement -
Homeபொழுதுபோக்குசுற்றி 150க்கும் மேற்பட்ட ஜூனியர் நடிகர்கள்... விமானங்களுக்கு நடுவே சண்டை காட்சி... பரபரக்கும் தக் லைஃப்...

சுற்றி 150க்கும் மேற்பட்ட ஜூனியர் நடிகர்கள்… விமானங்களுக்கு நடுவே சண்டை காட்சி… பரபரக்கும் தக் லைஃப் ஷூட்டிங்… இதுலாம் எந்த ஊர்லனு தெரியுமா?…

- Advertisement -

செக்க சிவந்த வானம் திரைப்படத்திற்கு பிறகு மணிரத்னம் அடுத்ததாக தக் லைப் படத்தில் பிசியாக இருக்கிறார். செக்கச் சிவந்த வானம் படத்தில் பிரகாஷ் ராஜ், அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி என ஏராளமான நடிகர்கள் நடித்திருந்தது போல, தக் லைப் படத்திலும் பல்வேறு நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர்.

 

இந்த திரைப்படத்தின் அறிமுக வீடியோவே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதில் நீண்ட முடியுடன் தோன்றிய கமல்ஹாசன், தன்னை ரங்கராய சக்திவேல் நாயக்கர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். காயல்பட்டினத்து காரன் என்று கூறிக்கொண்டு, திருநெல்வேலி வட்டார வழக்கில் கமல்ஹாசன் பேசியிருந்தார்.

 

அந்த வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. அது மட்டுமல்லாமல், தக் லைப் திரைப்படம் கேங்ஸ்டர் பாணியில் உருவாகுவதும் உறுதியாக்கப்பட்டது. இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

 

இதில் கமல்ஹாசன் உடன் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி, கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோ ஜூ ஜார்ஜ், அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கால்சீட் பிரச்சினை காரணமாக துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் படத்தில் இருந்து விலகினர். அவர்களுக்கு பதில் சிம்பு மற்றும் அசோக் செல்வன் ஆகியோர் படத்தில் இடம்பெற்றனர்.

 

இந்த நிலையில் டெல்லியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில் சிம்பு மற்றும் கமல்ஹாசன் தொடர்பான காட்சிகளை மணிரத்னம் படமாக்கினார். இதனைத் தொடர்ந்து, ஒரு குத்து பாடலும் எடுக்கப்பட்டது. சிம்புக்காக எடுக்கப்பட்ட அந்த பாடல், ஏ ஆர் ரகுமான் இசையில் வேறு லெவலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் தற்போது படக்குழு புதுச்சேரிக்கு விரைந்து இருக்கிறது. அங்குள்ள விமான நிலையத்தில் கிளைமாக்ஸ்சுக்கு முந்தைய காட்சிகளை மணிரத்னம் படமாக்கி வருகிறாராம். முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகளே இதில் இடம்பெறுகிறதாம். சுற்றி விமானங்களுக்கு மத்தியில், 150 க்கும் மேற்பட்ட ஜூனியர் நடிகர்களுடன் சண்டைக் காட்சியை படமாக்கி வருகிறார்களாம். இதில் கமல்ஹாசன் சிம்பு மற்றும் அசோக் செல்வன் ஆகியோர் இடம்பெற்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

சற்று முன்