- Advertisement -
Homeபொழுதுபோக்குசூப்பர் ஸ்டாருக்காக எழுதப்பட்ட கதையில் சிம்பு. ஹீரோ, வில்லன் என இரு வேடங்கள். உடல் எடையிலும்...

சூப்பர் ஸ்டாருக்காக எழுதப்பட்ட கதையில் சிம்பு. ஹீரோ, வில்லன் என இரு வேடங்கள். உடல் எடையிலும் மாற்றம்.

- Advertisement -

சிம்பு தற்போது தனது 48 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க, கமல்ஹாசன் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறார். தேசிங்கு பெரியசாமி இதற்கு முன் இயக்கிய “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” திரைப்படம் வேற லெவலில் ஹிட் அடித்தது.

“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” திரைப்படத்தை தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி ரஜினியிடம் கதை கூறியதாகவும் ரஜினியும் அத்திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார் எனவும் தகவல் வந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ அந்த புராஜெக்ட் பிக்கப் ஆகவில்லை.

- Advertisement -

“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி ரஜினியை வைத்து இயக்குகிறார் என்று வெளிவந்த செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. ஆனால் அந்த புராஜெக்ட் பிக்கப் ஆகாமல் போனது பலரையும் வருத்தத்திற்குள்ளாக்கியது.

எனினும் அதனை தொடர்ந்து ரஜினிக்காக தான் எழுதிய கதையை கமல்ஹாசனிடம் கொண்டு சென்றுள்ளார். அதனை தொடர்ந்து அந்த கதையில் சில மாற்றங்களை செய்ய சொல்லி சிம்புவுக்காக அந்த கதை தயாரானதாக செய்திகள் வெளிவருகின்றன.

- Advertisement -

இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தில் ஹீரோவும் சிம்புதானாம். வில்லனும் சிம்புதானாம். ஒரு கதாபாத்திரத்தில் ஒல்லியாக வரும் சிம்பு இன்னொரு கதாபாத்திரத்தில் சற்று பருமனாக வருகிறாராம். அதே போல் இத்திரைப்படம் ஒரு பீரியாடிக் திரைப்படம் என்றும் கூறப்படுகிறதாம்.

இந்த கதை ரஜினிக்காக எழுதப்பட்ட கதை என்பதால் நிச்சயம் சிம்புவின் கெரியரில் மிக முக்கியமான திரைப்படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம் வருகிற 2024 ஆம் ஆண்டு திரைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்