கடந்த 2023ம் ஆண்டில் பொங்கல் பண்டிகைக்கு அஜீத்குமார் நடித்த துணிவு படம் வெளியானது. 2 ஆண்டுகள் ஆன நிலையில் வருகிற பிப்ரவரி 6ம் தேதி மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தை கொண்டாட ஏகே ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன் விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. அனிருத் இசையில் ஹாலிவுட் படம் போல டிரெய்லர் காட்சிகள் மிரட்டுகின்றன. அர்ஜூன் ஆரவ் திரிஷா ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ள இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய விடாமுயற்சி படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி கூறியதாவது, விடாமுயற்சி படப்பிடிப்பு தொடர்ந்து 2 ஆண்டுகள் நடந்தது போன்ற ஒரு பிம்பம் ஏற்பட்டது. ஆனால் மொத்த படப்பிடிப்பு 121 நாட்கள் தான் நடந்தது. 2 பாடல்கள் தவிர்த்து 68 நாட்கள்தான் படத்தின் காட்சிகள் சூட்டிங் நடத்தப்பட்டது.
விடாமுயற்சி படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக குட்பேட் அக்லி படப்பிடிப்பில் அஜீத்குமார் கலந்துக்கொண்டார். கார் பந்தயம் பணிகளுக்காக அதற்கு முன்பாகவே 2 படங்களிலும் நடித்து முடிக்க வேண்டும் என்று ஒரே நேரத்தில் இரண்டு படத்தின் படப்பிடிப்புகளும் தொடர்ந்து அஜீத்குமார் பங்கேற்றார். இந்த 2 படப்பிடிப்புக்கான பயண நேரத்தில் மட்டுமே அவர் ஓய்வெடுத்தார்.
விடாமுயற்சி படத்தில் அஜித்குமாருக்கு பிரம்மாண்ட அறிமுக என்று சீன் கிடையாது. பஞ்ச் டயலாக் எதுவும் பேச மாட்டார். பயங்கர பில்டப்புடன் இன்டர்வெல் காட்சி எல்லாம் இருக்காது. விடாமுயற்சி படத்தை ரசிகர்கள் திறந்த மனதுடன் பார்க்க வாருங்கள். இந்த படம் அனைவரையும் திருப்தி படுத்தும். முழு திரைப்படத்தையும் பார்த்த அஜித்குமார் படம் இந்த அளவுக்கு சிறப்பாக வரும் என்று நினைக்கவில்லை என்று என்னிடம் கூறினார் என அந்த நேர்காணலில் மகிழ் திருமேனி கூறியிருக்கிறார்.
அஜித்துடன் மீண்டும் ஒரு படம் நீங்கள் இயக்குவதாக தகவல் வெளியானதே அது உண்மையா என்ற கேள்விக்கு, நான் மீண்டும் அஜித்குமாருடன் இணைவது பற்றி அவரிடம் இருந்து அறிவிப்பு வரும். அதுவரை நான் காத்திருக்கிறேன் என்றும் மகிழ்ந்திருமேனி இந்த நேர்காணலின் போது கூறியிருக்கிறார். அதனால் விடாமுயற்சி படம் பெரிய வெற்றியை பெறும் பட்சத்தில் மகிழ்திருமேனிக்கு மீண்டும் அஜீத்குமார் படத்தை இயக்க வாய்ப்புள்ளது.





