- Advertisement -
Homeபொழுதுபோக்குசத்தமே இல்லாமல் படப்பிடிப்பை முடித்த படக்குழு... தக் லைபில் தக் காட்டிய மணிரத்னம்... ஆச்சரியத்தில் கோலிவுட்...

சத்தமே இல்லாமல் படப்பிடிப்பை முடித்த படக்குழு… தக் லைபில் தக் காட்டிய மணிரத்னம்… ஆச்சரியத்தில் கோலிவுட் திரை உலகம்…

- Advertisement -

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களையும் எடுத்து விட்டு மீண்டும் தான் சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்தார் இயக்குனர் மணிரத்னம். 1980களில் தொடங்கி இன்றைய தலைமுறையினருக்கும் பிடிக்கும் வகையில் அவரது திரைப்படம் இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

- Advertisement -

இப்படியான சூழலில் தான் அண்மையில் தனது அடுத்த திரைப்படத்திற்கான அறிவிப்பை மணிரத்னம் வெளியிட்டார். 1987 ஆம் ஆண்டு அவர், உலகநாயகன் கமல்ஹாசன் உடன் இணைந்து நாயகன் திரைப்படத்தை இயக்கினார். இன்று வரை அந்தத் திரைப்படம் ரசிகர்களின் விருப்பப்படமாக உள்ளது.

 

- Advertisement -

இப்படியான சூழலில் தான் மீண்டும் இந்த இணை இணைவதாக அறிவிக்கப்பட்டது. தக் லைப் என இந்த திரைப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட, அது தொடர்பான அறிவிப்பு வீடியோவே விசில் அடிக்கும் வகையில் அமைந்தது. அதில் தனது பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார் கமல்ஹாசன்.

 

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் தான் அவரது ஊர் என்றும் அந்த அறிவிப்பு வீடியோவில் கூறியிருந்தார். நெல்லை மொழியில் கமல்ஹாசன் பேசும் அந்த வீடியோவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. ஆனால் திடீரென படத்தில் இருந்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் விலகுவதாக தெரிவித்தனர்.

 

கால் சீட் பிரச்சினை காரணமாக அவர்கள் படத்திலிருந்து பின்வாங்கி இருப்பதாக அப்போது கூறப்பட்டது. இப்படியான சூழலில் தான் துல்கர் சல்மான் கதாபாத்திரத்திற்கு மாற்றாக வந்தார் சிம்பு. அதேபோல் அசோக் செல்வனும் தக் லைப் திரைப்படத்தில் இடம் பெற்றார். அதில் இன்று வரை அசோக்செல்வன் கதாபாத்திரம் குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

 

மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. டெல்லி ராஜஸ்தான் ஜெய் சல்மார் உள்ளிட்ட இடங்களிலும், வெளிநாடுகளிலும் இதன் படப்பிடிப்பை நடத்தினர். இறுதியாக சென்னையில் முக்கிய சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டன. இப்படியான சூழலில் தக் லைப் திரைப்படத்தின் சூட்டிங் முடிக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனேகமாக இந்த ஆண்டின் இறுதியிலேயே தக் லைப் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்