- Advertisement -
Homeபொழுதுபோக்குதக்லைப் படத்தில் நடிக்க கமல் போட்ட திடீர் கண்டிஷன், திக்குமுக்காடிப் போன டைரக்டர் மணிரத்னம் -...

தக்லைப் படத்தில் நடிக்க கமல் போட்ட திடீர் கண்டிஷன், திக்குமுக்காடிப் போன டைரக்டர் மணிரத்னம் – இந்த வயசுல இப்படி ஒரு சவாலா?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்துக்கு பிறகு, மிக மிக பிஸியான ஒரு மனிதராக மாறிவிட்டார். ஒரே நேரத்தில் 3 படங்கள் வரை நடிக்கிறார். பொது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்கிறார். மக்கள் நீதிமய்யம் கட்சியையும் நிர்வகிக்கிறார்.

இப்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2, இந்தியன் 3 படங்களில் நடித்துவரும் கமல், சமீபத்தில்தான் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை முடித்துக்கொடுத்தார். அதேபோல் பிரபாஸ் நடிக்கும் புராஜெக்ட் கே ( கல்கி) படத்தின் கால்ஷீட்டையும் நடித்து முடித்து விட்டார். இனி 2வது பார்ட்டில் தான் அவர் நடிக்க வேண்டும்.

- Advertisement -

கமல்ஹாசனை பொருத்த வரை அடுத்தடுத்த கமிட்மெண்டுகளில் பிஸியாகிக் கொண்டே இருக்கிறார். அடுத்து நாடாளுமன்ற தேர்தலும் நெருங்கி விட்டது. வரும் மே மாதம் தேர்தல் நடக்க உள்ளது. அதற்கான பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும். தொகுதி வாரியாக தேர்தல் பிரசாரம் செல்ல வேண்டும்.

இதற்கிடையே எச். வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருந்த படமும் திடீரென கைவிடப்பட்டு விட்டது. இதற்கான சரியான காரணம் தெரியவில்லை. நேரமின்மையா, அல்லது படத்தை இயக்குவதில் ஏற்பட்ட சிக்கலா என்பதும் வெளிச்சத்துக்கு வரவில்லை. ஆனால் இப்போதைக்கு யோகி பாபு நடிக்கும் அரசியல் நையாண்டி கலந்த காமெடி படத்தை டைரக்ட் செய்ய தயாராகி விட்டார் எச். வினோத் என்பது மட்டும் உறுதியாகி உள்ளது.

- Advertisement -

இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் தக்லைப் படப்பிடிப்பு வரும் 22ம் தேதி துவங்குகிறது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், திரிஷா, அபிராமி உள்ளிட்டோர் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் நயன்தாரா நடிப்பதாக முதலில் ஒரு தகவல் பரவியது. ஆனால், இப்போதைக்கு திரிஷா, அபிராமி நடிப்பது மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வரும் 22ம் தேதி தக்லைப் படப்பிடிப்பு துவங்கும் நிலையில், மே மாத இறுதிக்குள் இந்த படத்தை முடித்துவிட வேண்டும் என்று மணிரத்னத்திடம் கமல்ஹாசன் ஸ்ட்ரிக்ட் ஆக கூறியிருக்கிறார். 4 மாதங்கதான் உள்ளது என்ற நிலையில், அதற்குள் படத்தை முடித்துவிடுங்கள். அதற்கு பிறகு என்னால் கால்ஷீட் தர முடியாது என்றும் கமல் தெரிவித்துள்ளார். இதனால், அப்செட் ஆன மணிரத்னம், வயசான காலத்துல கமல் வேகத்துக்கு நம்மால் ஈடுகொடுக்க முடியுமா, இப்படி ஒரு சவாலா என பலமான யோசனையில் மணிரத்னம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்