தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசன் ஒரு திரைப்படத்துறை சார்ந்த கலைஞனாக அவர் தொட்ட உச்சங்கள் ஏராளம். தமிழ் சினிமாவை அடுத்த நகர்வுகளுக்கு கொண்டு சென்றவர் கமல்ஹாசன். நாயகன், குருதிப்புனல், மூன்றாம் பிறை, ஹேராம், வேட்டையாடு விளையாடு, விருமாண்டி என அவரது படங்கள், தமிழ் சினிமாவுக்கு புதிய வழித்தடங்களை காட்டியது.
நடிகர் கமல்ஹாசனை பொருத்தவரை சினிமாவில் சம்பாதித்த பணம் முழுவதையும் சினிமாவிலேயே கொட்டிவிடும் பழக்கம் கொண்டவர். அவரே நடித்து, இயக்கி பல கோடிகளை சம்பாதிப்பார். அவரே படங்களை தயாரித்து அவை தோல்வியடைந்தால் பல கோடிகளில் நஷ்டப்படுவார்.
அதனால், கடந்த 40 ஆண்டுகளாக அவர் சம்பாதித்த வகையில் பெரிய அளவில் சொத்து எதுவும் சேர்த்து வைக்கவில்லை. இதற்கு அவருக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் என இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் இன்னும் திருமணமும் ஆகவில்லை.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்துக்கு பிறகு, இந்தியன் 2, இந்தியன் 3 என 2 படங்களில் கமல் நடித்துள்ளார். இதில் 150 கோடி ரூபாய் வரை கமல் சம்பளம் பெற்றிருக்கிறார். அதே போல், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் 150 கோடி ரூபாய் வரை வருமானம் பெற்றிருக்கிறார்.
அத்துடன் இப்போது கல்கி என்ற பான் இந்தியா படத்தில் நடிக்கவும் 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார். அத்துடன் தக்லைப் படத்திலும் இப்போது நடிக்க துவங்கியிருக்கிறார். இப்படி பல நூறுகோடி ரூபாய் சம்பாதிக்கும் நிலையில், மீண்டும் அந்த பணத்தை படத்தயாரிப்பு, அரசியல் என கமல் வீணாக்கி விடுவார் என கமல் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் அச்சமடைந்துள்ளனர்.
இதையடுத்து ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் இருவரும் தங்களது மூத்த அக்காக்களான அனுஹாசன், சுஹாசினி ஆகியோருடன் கமலை சென்று சந்தித்துள்ளனர். இதுவரை சம்பாதித்த பணத்தை எல்லாம் சினிமாவில் முதலீடு செய்து இழந்து விட்டீர்கள். இனி எக்காரணம் முன்னிட்டும் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை சினிமாவில் முதலீடு செய்வது, அரசியலுக்கு செலவு செய்வது, கடன் வாங்குவது என்று எதுவுமே செய்யக் கூடாது. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவன படம் தயாரிப்பு என கோடிக்கணக்கில் பணம் கடன் வாங்க கையெழுத்து போடக்கூடாது என கமலிடம் வலியுறுத்தி உள்ளனர். சுஹாசினி, அனுஹானும் அதையே வலியுறுத்த ஒரு கட்டத்தில் கமல், மகள்களின் பேச்சை மீற முடியாமல், இனி பணத்தை வீணாக்க மாட்டேன், கடன் வாங்க என வாக்குறுதி தந்திருக்கிறார்.





