சினிமாவில் முன்னணி நடிகைகளின் உச்ச நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. லேடீஸ் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா தான் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கிறார். ஒரு படத்தில் நடிக்க நயன்தாரா வாங்கும் சம்பளம் ரூ 10 கோடி முதல் 12 கோடி வரை என்று தெரிய வருகிறது.
அத்துடன் நயன்தாரா படத்தில் நடிக்க பல முக்கிய நிபந்தனைகளை விதிக்கிறார். அதாவது சென்னையில் இருந்து 50 கிலோமீட்டர் சுற்றளவில் நடக்கும் படப்பிடிப்பில் தான் அவர் கலந்து கொள்வார். காலை 11 மணிக்கு சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தால், மாலை 5 மணிக்கு கிளம்பி சென்று விடுவார். இரவில் நடக்கும் ஷூட்டிங்கில் பங்கேற்க மாட்டார்.
தவிர சூட்டிங் ஸ்பாட்டுக்கு தனது குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வருவார். அந்த குழந்தைகளை கவனித்துக் கொள்ள மூன்று நர்ஸ்கள் மற்றும் தனது பாதுகாப்புக்கான ஜிம் பாய்ஸ் ஆட்களையும் அவர் அழைத்து வருவார். இவர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட செலவுகளையும் தயாரிப்பாளரே கொடுத்து விட வேண்டும். இப்படிப்பட்ட நெருக்கடியான நிபந்தனைகளை அவர் விதித்தும் தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன.
இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக நடித்திருந்தார். ஊர்வசி, மவுலி உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தின் 2ம் பாகமாக ஆர் ஜே பாலாஜி மாசாணி அம்மன் என்ற படத்தை இயக்குவதாக சமீபத்தில் அறிவித்தார்.
ஆனால் இந்த 2ம் பாகம் படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக திரிஷாவை நடிக்க அவர் ஏற்பாடு செய்தார். ஆனால் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கிய தயாரித்த வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம், மூக்குத்தி அம்மன் 2 என்ற படத்தை அறிவித்து, அந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏனெனில் நயன்தாராவும் திரிஷாவும் தமிழ் சினிமாவில் போட்டி நடிகைகளாக கருதப்படுகின்றனர். இந்நிலையில் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாராவும், ஆர்கே பாலாஜி நடிக்கும் மாசாணி அம்மன் படத்தில் திரிஷாவும் நடிப்பது இருவருக்கும் பலத்த போட்டி என்ற சூழ்நிலையை உருவாகி இருக்கிறது. மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தை டைரக்டர் சுந்தர் சி இயக்குவதாக ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது. நாளை மாலை 6:00 மணிக்கு மூக்குத்தி அம்மன் 2 குறித்த ஒரு ஸ்பெஷல் அறிவிப்பை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.





