- Advertisement -
Homeபொழுதுபோக்கு38 ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வரும் நடிகர் கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படம்… கமல் பிறந்தநாளை...

38 ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வரும் நடிகர் கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படம்… கமல் பிறந்தநாளை முன்னிட்டு எப்போ ரிலீஸ் ஆகிறது தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் கமல்ஹாசன். நடிகராக மட்டுமின்றி பாடகர் தயாரிப்பாளர் இயக்குனர் கதை ஆசிரியர் எழுத்தாளர் கவிஞர் தொழில்நுட்ப கலைஞர் என பல அடையாளங்களை கொண்டவர். குறிப்பாக தமிழ் கலையுலகில் சகலகலா வல்லவன் என்று தன்னை பலமுறை நிரூபித்தவர் கமல்ஹாசன்.

ஆனால் சினிமாவில் ஜெயித்த அளவுக்கு அரசியலில் அவரால் மக்களிடம் பெரிய ஆதரவை பெற முடியவில்லை. மக்கள் நீதிமய்யம் என்ற அரசியல் இயக்கத்தை கடந்த 2018ம் ஆண்டில் நடிகர் கமல்ஹாசன் துவங்கினார். ஆனால் தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியை சந்தித்தார். இப்போது திமுக ஆதரவில் ராஜ்ய சபா எம்பியாக மாறியிருக்கிறார். ஏறக்குறைய திமுகவின் விசுவாசியாக கமல் மாறிவிட்டார் என்பதுதான் இதில் கசப்பான உண்மை.

- Advertisement -

கமல்ஹாசன் இதுவரை மத்திய அரசின் சார்பில் சிறந்த நடிகர் என 3 முறை தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார். அது மூன்றாம் பிறை நாயகன் மறறும் இந்தியன் ஆகிய படங்களாகும். இந்த படங்களில் நடித்த கமலுக்கு சிறந்த நடிகர் தேசிய விருதுகள் வழங்கப்பட்டது. ஆனால் அவர் நடித்த குணா மகாநதி என பல படங்களில் அவரது சிறந்த நடிப்புக்கு தேசிய விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1987ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படம் நாயகன். மும்பையில் வாழ்ந்த தமிழகத்தைச் சேர்ந்த வரதராஜன் முதலியார் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாகி இருந்தது. மும்பையில் தமிழ் தாதா வாக வேலுநாயக்கர் கேரக்டரில் கமல் இந்த படத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

அவருடன் சரண்யா நாயகியாக அறிமுகமானார். அவர்தான் இப்போது அம்மா கேரக்டரில் நடித்து வரும் சரண்யா பொன்வண்ணன். மேலும் ஜனகராஜ் டெல்லி கணேஷ் நாசர் நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற தென்பாண்டி சீமையிலே நீ ஒரு காதல் சங்கீதம் போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்களாக இப்போதும் ரசிக்கப்படுகின்றன.

நடிகர் கமலுக்கு சிறந்த நடிகர் விருது, ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராமுக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருது, சிறந்த கலை இயக்குனர் தோட்டாதரணி என நாயகன் படத்துக்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன. தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படும் நாயகன் படத்தை 38 ஆண்டுகளுக்கு பிறகு ரி ரிலீஸ் செய்ய உள்ளனர். இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றபடி டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படத்தை மெருகேற்றி வருகிற நவம்பர் 7ம் தேதி கமல் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தை நவம்பர் 6ம் தேதி தமிழகம் முழுவதும் ரி ரிலீஸ் செய்ய உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்