- Advertisement -
Homeபொழுதுபோக்குஇனி ஒரு ரூபா கூட கிடைக்காது… ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட கம்ருதீன் பார்வதி -...

இனி ஒரு ரூபா கூட கிடைக்காது… ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட கம்ருதீன் பார்வதி – பிக்பாஸ் விதிமுறைகளின்படி இது உண்மைதானா?

- Advertisement -

பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும். ஆனால் நாறுடன் சேர்ந்த பூவும் இப்போது நாறிப் போய்விட்டது என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அப்படி தான் கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை பிக்பாஸ் வீட்டுக்குள் பார்வதியுடன் சேர்ந்துக் கொண்ட கம்ருதீனுக்கு மிக மோசமான விளைவை ஏற்படுத்தி உள்ளது. இது அவருக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே ஒரு பாடம்தான்.

பிக்பாஸ் வீட்டுக்குள் நல்ல முறையில் விளையாடி வந்த கம்ருதீனுக்கு டைட்டில் வின்னர் வாய்ப்பு இருப்பதாகவே பலர் கருதினார்கள். அந்த அளவுக்கு அவரது செயல்பாடுகள் ஒருகட்டத்தில் சரியாக இருந்தது. ஆனால் பார்வதியின் காதல் வலையில் விழுந்து அவருடன் நெருக்கம் காட்டிய பிறகு எல்லாமே தலைகீழாக மாறிப்போனது.

- Advertisement -

அதன் உச்சக்கட்டமாக டிக்கெட் டூ பினாலே கார் டாஸ்க்கில் சாண்ட்ராவை காருக்குள் இருந்து உதைத்து வெளியே தள்ளிய விவகாரத்தில் ரெட் கார்டு கொடுத்து பார்வதியும் கம்ருதீனும் இப்போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே துரத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின் முக்கிய விதிமுறைகள் குறித்த பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதாவது ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட கம்ருதீன், பார்வதி இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் இனி செலிபரட்டியாக வரவே அனுமதி இல்லை. அவர்கள் பிக்பாஸ் விருது விழாவிலும், பிக்பாஸ் கொண்டாட்ட நிகழ்வுகளிலும் பங்கேற்க அனுமதி இல்லை. பிக்பாஸ் சார்ந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவர்கள் இனி பங்கேற்க முடியாது.

- Advertisement -

மேலும் பிக்பாஸ் ரகசிய விதிமுறைகளின் படி ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பார்வதி கம்ருதீனுக்கு 90 நாட்கள் அவர்கள் வீட்டுக்குள் இந்த நிலையில் அதற்கான சம்பளமாக ஒரு ரூபாய் கூட வழங்கப்பட மாட்டாது. போனஸ் உள்ளிட்ட இதர சலுகைககள் எதுவுமே இருக்காது என்றும் ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் அவர்களது சம்பளத்தில் போனஸ் இதர சலுகைகள் எதுவும் இருக்காது. பாதி சம்பளமாக குறைத்து தரப்படலாம் என்றும் ஒரு தகவல் உள்ளது. பிக்பாஸ் வீட்டின் விதிமுறைகள் ரகசியமானவை என்றாலும் ரெட் காா்டு கொடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு விரட்டப்பட்டவர்களுக்கு சம்பளம் இல்லை என்பதே பிக்பாஸின் முக்கிய விதிகளில் ஒன்று என ஒரு சிலர் உறுதியாக கூறிவருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்