- Advertisement -
Homeபொழுதுபோக்குரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா கங்குவா? கைக்கோர்த்த விஜய், அஜித் ரசிகர்கள்

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா கங்குவா? கைக்கோர்த்த விஜய், அஜித் ரசிகர்கள்

- Advertisement -

சூர்யாவின் திரைப்பட வாழ்க்கையில் அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் என்றால் அது கங்குவா தான். சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாக உள்ள இந்த திரைப்படம் 10 மொழிகளில் தயாராகிறது. 3டி தொழில்நுட்பத்தில் இந்த படத்தை வெளியிடும் முடிவில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இருக்கிறது. இந்த படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் சில காட்சிகள் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்பட்டது.

இதனை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தாலும் மற்ற ரசிகர்கள் இடையே இது எந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று தற்போது பார்க்கலாம். இந்த காட்சிகளை பத்திரிக்கையாளர்களுக்கு மட்டும் முன்கூட்டியே படத் தயாரிப்பாளர்கள் ஒரு திரையரங்கில் போட்டு காண்பித்தார்கள். உடனே அவர்கள் பலரும் ஆகா ஒஹோ என்று கொடுத்த காசுக்கு மேலே கூவி விட்டார்கள். இதனால் இந்த டீசர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

- Advertisement -

ஆனால் டீசர் வந்ததும் தங்களது எதிர்பார்ப்பை கங்குவா பூர்த்தி செய்யவில்லை என்று பலரும் குற்றச்சாட்டு வருகின்றனர். குறிப்பாக படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் மோசமான வகையில் இருப்பதாகவும் சூர்யாவின் தோற்றமும் தேவி பிரசாத் இசையும் மட்டுமே டீசரில் பார்க்கும் வகையில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் படத்தில் தோன்றும் மிருகங்கள் அந்த சண்டை நடக்கும் இடம் என அனைத்துமே மோசமான கிராபிக்ஸை வெளிக்காட்டுவதாக குற்றச்சாட்டு உள்ளனர். இதனால் கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காது என்றும் இது தோல்வி படமாக அமைய வாய்ப்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

- Advertisement -

குறிப்பாக விஜய் அஜித் ஆகிய இரு நடிகர்களின் ரசிகர்களும் இணைந்து கங்குவா திரைப்படத்திற்கு தற்போது மீம்ஸ்களை போட்டு கலாய்த்து வருகின்றனர். இதனால் சூர்யா ரசிகர்கள் தற்போது கலக்கமடைந்துள்ளனர். மற்ற ரசிகர்களின் கேலி கிண்டல் ஒரு புறம் இருக்க நிச்சயமாக கங்குவா எதிர்பார்த்தபடி இல்லை என்பதே உண்மை.

- Advertisement -

சற்று முன்