- Advertisement -
Homeபொழுதுபோக்குபுதிய ரிலீஸ் தேதியை லாக் செய்த கங்குவா படக்குழு... இந்த முறை குறுக்க எந்தப் படமும்...

புதிய ரிலீஸ் தேதியை லாக் செய்த கங்குவா படக்குழு… இந்த முறை குறுக்க எந்தப் படமும் வந்து விடக்கூடாது சாமி…

- Advertisement -

சூர்யாவின் திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிறது. கடைசியாக அவர் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது.

 

- Advertisement -

தற்போது இந்த திரைப்படம் டிவியில் அடிக்கடி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆனால் சூர்யாவின் திரைப்படமோ இன்னும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான விக்ரம் திரைப்படத்தின், ரோலக்ஸ் என்னும் வலுவான கதாபாத்திரத்தில் வந்திருந்தார் சூர்யா.

 

- Advertisement -

வெறும் பத்து நிமிடங்கள் மட்டுமே அவர் வந்தாலும், அதற்கான தாக்கம் மிகப்பெரிய அளவில் இருந்தது. அந்த கேரக்டரை பார்த்து பலரும், ரோலக்ஸ் போல் வேடமிட்டு ரீல்ஸ்களை வெளியிட்டு வந்தனர். திரையைத் தாண்டி இந்த கதாபாத்திரம் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பேசப்பட்டு வந்தது.

 

ஆனால், சூர்யா ரசிகர்களை குஷி படுத்த அதன் பிறகு எந்த ஒரு வலுவான அறிவிப்பும் வெளியாகவில்லை. பாலாவுடன் வணங்கான் திரைப்படத்தில் நடித்த சூர்யா அதில் பாதியிலிருந்து வெளிவந்தார். இதன் பிறகு தான் சிறுத்தை சிவாவின் கதையில் நடிக்க ஒப்புக்கொண்டார் சூர்யா.

 

கங்குவா என டைட்டில் வைக்கப்பட்ட இந்த திரைப்படம் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு படப்பிடிப்புக்கு மட்டும் செலவழித்துள்ளது. மிகப்பெரிய பொருட்செலவில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. பூர்வ ஜென்ம கதையை நடப்புக் கதையுடன் இந்த திரைப்படத்தில் தொடர்பு படுத்தி காட்சிகளை காட்டியிருக்கிறார்கள். படத்தில் பாபி தியோல் வில்லனாக நடித்திருக்கிறார்.

 

இந்த திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினத்தில் வேட்டையன் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டதால், ரிலீஸ் தேதியிலிருந்து பின்வாங்கியது கங்குவா. இந்த நிலையில் அதன் வெளியீடு தேதி குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி வரும் நவம்பர் மாதம் 14ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து ஒரு மாதம் பின்வாங்கி இருக்கும் கங்குவா, ரசிகர்களை பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

- Advertisement -

சற்று முன்