- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத்குமார் ஆட்டத்தில் இருந்து வெளியேறியதால் தீபாவளி களத்தில் குதிக்கத் தயாரான சூர்யா? உற்சாகமான அறிவிப்பை எதிர்பார்க்கும்...

அஜீத்குமார் ஆட்டத்தில் இருந்து வெளியேறியதால் தீபாவளி களத்தில் குதிக்கத் தயாரான சூர்யா? உற்சாகமான அறிவிப்பை எதிர்பார்க்கும் ரசிகர்கள் – கங்குவா தயாரா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் சூர்யா. ஆனால் சமீபகாலமாக அவரது படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. ஜெய்பீம், சூரரைப் போற்று ஆகிய படங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவுக்கு பெயர் சொல்லும்படியாக எந்த படமும் அமையவில்லை.

இயக்குனர் பாலா இயக்கத்தில் அவர் நடிக்க வேண்டிய வணங்கான் படமும், சுதா கொங்கராக இயக்கத்தில் நடிக்க வேண்டிய புறநானூறு படமும் கைநழுவி போய்விட்டது. இந்த படங்களில் நடிக்க கமிட்டான அவர், சில காரணங்களால் படப்பிடிப்பில் தொடர்ந்து பங்கேற்க முடியாமல் அந்த படங்களிலிருந்து விலகி விட்டார்.

- Advertisement -

அதன் பிறகு டைரக்டர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் நடித்தார். புறநானூறு படக் கதையில் சூர்யா நடிக்க வேண்டிய கேரக்டரில் சிவகார்த்திகேயனும் நடிப்பது தற்போது உறுதி செய்யப்பட்டது. இந்த இரண்டு படங்களுமே சூர்யாவுக்கு பெரிய அளவில் திருப்புமுனையை ஏற்படுத்தும் படங்களாக அமைய அதிக வாய்ப்பிருந்தது.

நடிகர் சூர்யாவும் அவரது ரசிகர்களும் பெரிய அளவில் எதிர்பார்த்துள்ள படம் கங்குவா. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட இந்த படம், வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. கங்குவா இரண்டு பாகங்களாக உருவாக்கப்படும் நிலையில், முதல் பாகம் வருகிற அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் செய்யப்பட திட்டமிடப்பட்டது.

- Advertisement -

ஆனால் அக்டோபர் 10ம் தேதி ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் ரிலீஸ் செய்யப்படுவதால் அந்த நாளில் கங்குவா வந்தால் வசூல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கங்குவா படம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. தீபாவளிக்கு அஜீத் நடித்த விடாமுயற்சி, சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படமும் வெளியாகும் என்பதால் கங்குவா ரிலீஸ் வருகிற நவம்பர் 14ம் தேதிக்கு முடிவு செய்யப்பட்டது.

நடிகர் அஜித்குமார் நடித்த விடாமுயற்சி படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் இல்லை. டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் பண்டிகைக்குதான் ரிலீஸ் ஆகும் என்று நடிகர் அர்ஜுன் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார். படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ள அர்ஜுன் இந்த தகவலை வெளியிட்டுள்ளதால் விடாமுயற்சி படம் தீபாவளிக்கு ரிலீஸ் இல்லை என உறுதியாகி விட்டது. அதனால் தீபாவளி ஆட்டத்தில் இருந்து அஜித்குமார் படம் விடாமுயற்சி வெளியேறியதால், தீபாவளி களத்தில் சூர்யா நடித்த கங்குவா படம் குதிக்கிறது. தீபாவளிக்கு கங்குவா ரிலீஸாகிறது. இது சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்