- Advertisement -
Homeபொழுதுபோக்கு96 இயக்குனரின் திரைப்படத்தில் வேலையை முடித்த கார்த்தி... குடும்பங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் கதையில் நடிகருக்கு சகோதரியாக...

96 இயக்குனரின் திரைப்படத்தில் வேலையை முடித்த கார்த்தி… குடும்பங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் கதையில் நடிகருக்கு சகோதரியாக நடிப்பது யார் தெரியுமா?…

- Advertisement -

நடிகர் கார்த்திக்கு சென்ற ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் ஜப்பான் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் ஜப்பான் திரைப்படம் கார்த்தியின் 25வது திரைப்படமாக உருவாகி இருந்தது. குக்கூ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ராஜூமுருகன் இந்த படத்தை எடுத்திருந்தார்.

மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. திரைக்கதை படத்தோடு ஒட்டிக் கொள்ளாததால் ரசிகர்கள் இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு தெரிவிக்கவில்லை. இப்படியான சூழலில் தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி.

- Advertisement -

இதில் அவரது 26வது திரைப்படத்தை இயக்கி வருபவர் நலன் குமாரசாமி. ஏற்கனவே சூது கவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் திரைப்படங்களை இயக்கிய நலன் தற்போது கார்த்தியுடன் பணி புரிந்து வருகிறார். இதில் கார்த்தி எம்ஜிஆர் ரசிகராக நடிப்பதாக கூறப்படுகிறது. அதுபோக ராஜ்கிரண் மற்றும் சத்யராஜ் ஆகியோரும் படத்தில் உள்ளனர்.

இதன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எஞ்சிய பணிகள் இன்னும் தொடங்காமலேயே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு பக்கம் இருக்க தனது 27வது படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் கார்த்தி.

- Advertisement -

96 திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட பிரேம்குமார் தான் இந்த திரைப்படத்தின் இயக்குனர். முழுக்க முழுக்க குடும்ப கதையாக இது உருவாகி இருக்கிறது. படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். சின்னத்திரையில் நடித்துக் கொண்ட சுவாதி இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஸ்ரீ திவ்யாவிற்கும் முக்கிய கதாபாத்திரத்தை பிரேம்குமார் வைத்திருக்கிறாராம். இவர் கார்த்தியின் சகோதரியாக நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த டிசம்பர் மாதம் இதன் சூட்டிங் பணிகள் தொடங்கிய நிலையில், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதற்கு மெய் அழகன் என டைட்டில் வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்