- Advertisement -
Homeபொழுதுபோக்குபிளாஸ்ட் படத்தின் இயக்குனரின் அடுத்த படத்தில் நடிப்பது அந்த ஹீரோ தான் - ஆனால் அர்ஜூன்...

பிளாஸ்ட் படத்தின் இயக்குனரின் அடுத்த படத்தில் நடிப்பது அந்த ஹீரோ தான் – ஆனால் அர்ஜூன் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

- Advertisement -

அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் நடிகர் அர்ஜூன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பிளாஸ்ட். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்த இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 70 கோடி ரூபாய் வசூலை அள்ளியது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரளம் ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.

இந்த படத்தின் அபார வெற்றியால் படத்தில் ஹீரோவாக நடித்த ஆக்சன் கிங் நடிகர் அர்ஜூனுக்கு சூப்பர் கம்பேக் கிடைத்துள்ளது. 62 வயதிலும் ஆக்சன் காட்சிகளில் தூள் கிளப்பியிருக்கிறார். அத்துடன் அவரது மனைவியாக நடித்த அபிராமி மகளாக நடித்த ப்ரீத்தி முகுந்தன் போன்றவர்களும் ஆக்சன் காட்சிகளில் அசத்தியிருக்கின்றனர்.

- Advertisement -

பிளாஸ்ட் படம் தந்த அபார வெற்றியால் அர்ஜூனுக்கு நிறைய பட வாய்ப்புகள் இப்போது தேடி வருகின்றன. பல தயாரிப்பாளர்கள் பல இயக்குனர்கள் அவருக்கான கதைகளுடன் தினமும் வருகின்றனர். இதற்கிடையே நடிகர் அர்ஜூன் அவர் நடித்த ஏழுமலை படத்தின் 2ம் பாகத்தை அவரே டைரக்ட் செய்து மீண்டும் அவரே ஹீரோவாக நடிக்க திட்டமிட்டுள்ளார்.

தனக்கு இயக்குனராக முதல் படம் இயக்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 2வது படத்தையும் இயக்க சுபாஷ் கே ராஜ் தயாராகி விட்டார். இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் கார்த்தி நடிக்க உள்ளார். கதையும் ஓகே ஆகிவிட்டது.

- Advertisement -

ஆனால் தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. பிளாஸ்ட் படத்தின் கதையை நடிகர் சியான் விக்ரமை மனதில் வைத்துதான் சுபாஷ் கே ராஜ் ஸ்கிரிப்ட் எழுதியிருக்கிறார். ஆனால் என்ன காரணத்தினாலோ அவர் நடிக்கவில்லை. அதன்பிறகுதான் அர்ஜூன் நடித்து அந்த படம் பிளாக்பஸ்டர் ஆகியிருக்கிறது.

சமீபத்தில் பிளாஸ்ட் படத்தை பார்த்து அசந்து போன நடிகர் சியான் விக்ரம் இயக்குனர் சுபாஷ் கே ராஜிடம் பேசியிருக்கிறார். அப்போது எனக்கும் கதை ரெடி பண்ணுங்க. 2 பேரும் சேர்ந்து படம் பண்ணுவோம் என்று கூறியிருக்கிறார். அதனால் சுபாஷ் கே ராஜ் இயக்கும் 3வது படத்தின் ஹீரோ சியான் விக்ரமாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்